தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மழைநீருடன் கழிவுநீர்.. பொன்னமராவதி மக்கள் புலம்பல்! - Pudukottai

பொன்னமராவதி பேருந்து நிலையம் அருகே சாலையில் மழை நீர் தேங்கியதால் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.

Etv Bharat
Etv Bharat

By

Published : Nov 12, 2022, 8:03 PM IST

புதுக்கோட்டை:வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், புதுக்கோட்டை மாவட்டத்தில் நேற்றிரவு (நவ.11) கனமழை பெய்தது. பொன்னமராவதி பகுதியில் சுமார் 5 மணி நேரம் பெய்த கனமழையின் காரணமாக பொன்னமராவதி பேரூராட்சியின் பகுதியில் ஆங்காங்கே மழைநீர் தேங்கியது.

இந்நிலையில் பொன்னமராவதி பேருந்து நிலையம் அருகே உள்ள கால்வாயில் சாக்கடை அடைப்பு ஏற்பட்டதால் மழைநீர் செல்ல வழி இல்லாமல் கடைகளுக்குள் தண்ணீர் புகுந்தது. மழைநீருடன் கழிவுநீரும் கலந்தது. பின்னர் பொன்னமராவதி பேரூராட்சி ஊழியர்கள் சாலையின் குறுக்கே குழி தோண்டி சாக்கடை செல்ல வழி ஏற்படுத்தியதையடுத்து சாக்கடை நீர் வடிந்தது.

மழை நீர் வெளியேற்றும் பணிகள்

ஆனால் சாலையில் குறுக்கே குழி ஏற்பட்டதன் காரணமாக பேருந்து மற்றும் வாகன போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டது. இப்பள்ளத்தின் காரணமாக பேருந்து போக்குவரத்தில் சிரமம் ஏற்பட்டுள்ளதோடு இருசக்கர வாகன ஓட்டிகளும் கடும் அவதி அடைந்துள்ளனர்.

இதையும் படிங்க:தி.மலை அருகே விவசாய பணியின் போது மின்னல் தாக்கியதில் பெண் பலி!

ABOUT THE AUTHOR

...view details