தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பழுதடைந்த சாலை: செப்பனிட்டுத் தரக்கோரி பொதுமக்கள் கோரிக்கை! - பழுதடைந்த சாலை

புதுக்கோட்டை: அறந்தாங்கி அருகேவுள்ள கிராமத்தில் சாலை போடப்பட்டு 15 ஆண்டுகள் கடந்த நிலையில், சாலை முழுவதுமாக பழுதடைந்தால் அதனை செப்பனிட்டுத் தரக்கோரி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பழுதடைந்து காணப்படும் சாலை
பழுதடைந்து காணப்படும் சாலை

By

Published : Dec 15, 2020, 10:18 PM IST

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகேவுள்ள விௗத்தூர் கிராமத்தில் 60க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இப்பகுதியில் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு ஆவுடையார்கோயில்-கோட்டைப்பட்டிணம் முக்கிய சாலையிலிருந்து இக்கிராமத்திற்கு கிளை தார் சாலை போடப்பட்டது.

சாலை போடப்பட்டு 15 ஆண்டுகள் கடந்த நிலையில், சாலை முழுவதுமாக பழுதடைந்து ஆங்காங்கே கப்பிக்கற்கள் மட்டுமே மிஞ்சியுள்ளன. மேலும், சாலையில் புற்கள் முளைத்து ஒற்றையடி பாதையாகக் காட்சியளிக்கிறது.

மேலும், சாலையின் குறுக்கே வடிகால்வாய்க்காக போடப்பட்ட பாலம், தற்போது பெய்த மழையால் முற்றிலும் இடிந்து சேதமானது. இதனால், சாலையில் தேங்கிய தண்ணீர் குளம் போல் காட்சியளிக்கிறது.

இந்நிலையில், சாலையை செப்பனிட்டு தரக்கோரி சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் பலமுறை முறையிட்டும் எவ்வித பலனும் இல்லையென்று அப்பகுதி மக்கள் வேதனைத் தெரிவிக்கின்றனர்.

பழுதடைந்து காணப்படும் சாலை

எனவே தமிழ்நாடு அரசு உடனடியாக இச்சம்பவத்தில் தலையிட்டு பழுதடைந்த தார் சாலையை செப்பனிட்டுத் தருமாறு அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதையும் படிங்க: தொடக்க கல்வி ஆசிரியர் தேர்வில் 98 விழுக்காடு மாணவர்கள் தோல்வி: மறு தேர்வு வைக்க கோரிக்கை

ABOUT THE AUTHOR

...view details