தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கிராம சபை கூட்டத்தைப் புறக்கணித்த மக்கள்..! அடிப்படை வசதி வேண்டி போராட்டம்... - அடிப்படை வசதி வேண்டி போராட்டம்

புதுக்கோட்டை அருகே கிராம சபை கூட்டத்தைப் புறக்கணித்த மக்கள், அடிப்படை வசதி வேண்டி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Gramasaba protest  Gramasaba meeting  pudukkottai Gramasaba meeting  pudukkottai news  pudukkottai latest news  சாலை மறியல்  கிராம சபை கூட்டத்தை புறக்கணித்த மக்கள்  கிராம சபை கூட்டம் புறக்கணிப்பு  கிராம சபை கூட்டம்  போராட்டம்  அடிப்படை வசதி வேண்டி போராட்டம்
கிராம சபை கூட்டத்தை புறக்கணித்த மக்கள்

By

Published : Nov 1, 2022, 6:22 PM IST

Updated : Nov 1, 2022, 6:31 PM IST

புதுக்கோட்டை:பொன்னமராவதி அருகே உள்ள ஆர்.பாலக்குறிச்சி ஊராட்சியில், உள்ளாட்சி தினத்தை முன்னிட்டு நடைபெறவிருந்த கிராம சபை கூட்டத்தைப் புறக்கணித்து கிராம மக்கள் சாலையில் அமர்ந்து போராட்டம் நடத்தினர். இப்போராட்டத்தில், கோபால்பட்டி, ரெகுநாதபட்டி, சீகம்பட்டி உள்பட ஆறு கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் ஈடுபட்டிருந்தனர்.

இதில், ஆர்.பாலக்குறிச்சியில் இருந்து பொன்னமராவதி மற்றும் புழுதிப்பட்டிக்கு செல்லும் சாலையை சீரமைக்க வேண்டும் முதியோர் உதவித்தொகை வேண்டும் ஆரம்ப சுகாதார நிலையம் வேண்டும், கால்நடை மருத்துவமனை வேண்டும். பேருந்து வசதி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.

அடிப்படை வசதி வேண்டி போராட்டம்

போராட்டம் குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்குச் சென்ற வட்டார வளர்ச்சி அலுவலர் குமரன், பொதுமக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். பேச்சுவார்த்தையில் உடன்படாத கிராம மக்கள் சாலையில் அமர்ந்து மீண்டும் போராட்டம் நடத்தினர். இதனைத் தொடர்ந்து உலகம்பட்டி காவல் துறைக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது.

தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்குச் சென்ற காவல்துறையினர், பொதுமக்களின் கோரிக்கைகள் சம்பந்தப்பட்ட துறைக்கு அனுப்பி வைக்கப்படும் எனத் தெரிவித்தனர். இதனால் சமாதானம் அடைந்த பொதுமக்கள் தற்காலிகமாகப் போராட்டத்தை நிறுத்தி வைப்பதாகவும் மூன்று மாதத்தில் கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிட்டால் மீண்டும் சாலை மறியல் நடைபெறும் என்று கூறி போராட்டத்தைக் கைவிட்டனர்.

இதையும் படிங்க: மழையில் சென்னை காவல் ஆணையர் அலுவலகம்; அன்றும்... இன்றும்...!

Last Updated : Nov 1, 2022, 6:31 PM IST

ABOUT THE AUTHOR

...view details