புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை தாலுகாவிற்குள்பட்ட ஆதனக்கோட்டை கீழக்காடு கிராமத்தில், தண்ணீரைத் தேடி ஆண் மயில் ஒன்று வந்தபோது மலையாண்டி என்ற விவசாயிக்குச் சொந்தமான கிணற்றில் தவறிவிழுந்தது.
இதனையடுத்து விவசாயி தீயணைப்புத் துறையினருக்குத் தகவல் கொடுத்ததின்பேரில் கந்தர்வகோட்டை தீயணைப்பு மீட்பு வீரர்கள் விரைந்துசென்று மயிலை உயிருடன் மீட்டு வனத் துறையினரிடம் ஒப்படைத்தனர்.
கடும் வெயிலின் காரணமாக வனவிலங்குகள் தண்ணீருக்காக வெகுதூரம் செல்கின்றன. அப்படிச் செல்லும்போது இதுபோல் விபத்தில் சிக்கிக்கொள்கின்றன.
வனத் துறையினர் வனவிலங்குகளுக்குத் தண்ணீர் ஏற்பாடு செய்யாமல் இருப்பதே இதுபோன்ற விபத்திற்குக் காரணமாக இருக்கிறது என அப்பகுதி விவசாயிகள் கூறுகின்றனர்.
இதையும் படிங்க:'அடேய் நான் தண்ணீர் குடிக்கத்தான் வந்திருக்கேன்' - யானைக்கன்றால் மிரண்டோடிய மான் கூட்டம்!