தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

வீடு தேடி வரும் நடமாடும் காய்கறிக் கடை - corona effects vegetables delivery in pudhukottai news

புதுக்கோட்டை: கரோனா பாதிப்பின் காரணமாக பொதுமக்கள் வெளியே வராமல் தடுப்பதற்காக நடமாடும் காய்கறிக் கடையை மாவட்ட ஆட்சியர் உமா மகேஷ்வரி தொடக்கிவைத்தார்.

புதுக்கோட்டை:கரோனா பாதிப்பின் காரணமாக பொதுமக்கள் வெளியே வராமல் தடுப்பதற்காக நடமாடும் காய்கறி கடையை மாவட்ட ஆட்சியர் உமா மகேஷ்வரி துவக்கி வைத்தார்.
புதுக்கோட்டை:கரோனா பாதிப்பின் காரணமாக பொதுமக்கள் வெளியே வராமல் தடுப்பதற்காக நடமாடும் காய்கறி கடையை மாவட்ட ஆட்சியர் உமா மகேஷ்வரி துவக்கி வைத்தார்.

By

Published : Mar 31, 2020, 10:01 PM IST

நாடு முழுவதும் கரோனா வைரஸின் பாதிப்பு அதிகமாகி வரும் நிலையில், 144 தடை உத்தரவால் பொதுமக்கள் வெளியே வர முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால் காய்கறிகள் வாங்குவதற்கும், அத்தியாவசிய பொருள்களை வாங்கவும் மக்கள் அதிக அளவில் வெளியே வருவதால், காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்கின்றனர்.

பொதுமக்கள் வீடு தேடி வரும் நடமாடும் காய்கறி கடை

இதைக் கட்டுப்படுத்தும் விதமாக புதுக்கோட்டை நிஜாம் காலனியில் கூட்டுறவு துறையின் சார்பில் நடமாடும் காய்கறிக் கடை அறிமுகப்படுத்தப்பட்டது. இதனை மாவட்ட ஆட்சியர் உமா மகேஷ்வரி இன்று தொடக்கிவைத்தார். இந்த காய்கறிகளை பொதுமக்கள் சமூக இடைவெளி விட்டு, வரிசையாக நின்று வாங்கிச் சென்றனர்.

மேலும், வீட்டுக்கே சென்று காய்கறிகளை விநியோகம் செய்யப்படுவதால் பொதுமக்கள் தேவையில்லாமல் வெளியே சுற்றித் திரிவது குறையும். இன்று தொடங்கிய இந்த திட்டம் புதுக்கோட்டையில் உள்ள அனைத்து இடங்களிலும் துவங்கப்படும் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இதையும் படிக்க:தமிழ்நாட்டிற்கு காய்கறி வாகனங்கள் செல்ல கர்நாடக ஆட்சியர் உத்தரவு!

ABOUT THE AUTHOR

...view details