தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

வயல்வெளியில் மலைப்பாம்பு... போராடி காட்டிற்குள் விட்ட இளைஞர்கள்

புதுக்கோட்டை: அன்னவாயல் அருகே உள்ள பிராம்பட்டியில் மகேஸ்வரன் என்பவருக்குச் சொந்தமான வயலில் சுற்றி திரிந்த மலைப்பாம்பை, அப்பகுதியில் உள்ள இளைஞர்கள் பிடித்து, வனப்பகுதிக்குள் விட்டனர்.

புதுக்கோட்டை: அன்னவாயல் அருகே உள்ள பிராம்பட்டியில் மகேஸ்வரன் என்பவருக்கு சொந்தமான வயலில் சுற்றிதிரிந்த  மலைப்பாம்பை, அப்பகுதியில் உள்ள இளைஞர்கள் பிடித்து, வனப்பகுதிக்குள் விட்டனர்.
புதுக்கோட்டை: அன்னவாயல் அருகே உள்ள பிராம்பட்டியில் மகேஸ்வரன் என்பவருக்கு சொந்தமான வயலில் சுற்றிதிரிந்த மலைப்பாம்பை, அப்பகுதியில் உள்ள இளைஞர்கள் பிடித்து, வனப்பகுதிக்குள் விட்டனர்.

By

Published : Feb 9, 2020, 4:18 PM IST

புதுக்கோட்டை அன்னவாசல் அருகே உள்ள பிராம்பட்டியில் மகேஸ்வரன் என்பருக்குச் சொந்தமான வயல் ஒன்று உள்ளது. அந்த வயலில் அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் கதிர் அறுக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்பொழுது வயலுக்குள் ஏதோ நகர்வது போல் தெரிந்துள்ளது. வேலை செய்தவர்கள் அங்கு சென்று பார்த்தபொழுது மலைப்பாம்பு ஒன்று நகரமுடியாமல் கிடந்துள்ளதைப் பார்த்து உள்ளனர்.

இதனையடுத்து அப்பகுதியில் உள்ள இளைஞர்கள் ஒன்று சேர்ந்து, அந்த பாம்பைப் பிடிக்க முயன்றனர். ஆனால் யாருக்கும் பிடிகொடுக்காமல் மலைப்பாம்பு போக்குக் காட்டியது.

இதையடுத்து, ஒரு மணி நேரப் போராட்டத்திற்கு பின்பு, மலைப்பாம்பை பிடித்த இளைஞர்கள் அந்தப் பாம்பை சாக்கு பையில் போட்டு, நார்த்தாமலையில் உள்ள வனப்பகுதிக்குள் கொண்டு சென்று விட்டனர்.

இதையும் படிக்க:ஆரத்தி எடுக்க பெண்ணிடம் மலைப்பாம்பை எடுத்து நீட்டிய வனத்துறை ஊழியர்கள்

ABOUT THE AUTHOR

...view details