தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தைலமரங்கள் நடுவதற்கு நீதிமன்றம் இடைக்கால தடை - விவசாயிகள் மகிழ்ச்சி - புதுக்கோட்டை மாவட்ட விவசாயிகள் மகிழ்ச்சி

புதுக்கோட்டை: தைல மரங்களை நடுவதற்கு நீதிமன்றம் வாயிலாக இடைக்கால தடை வாங்கி வெற்றி பெற்ற விவசாயிகள் இனிப்புகள் வழங்கி கொண்டாடி மகிழ்ந்தனர்.

இனிப்புகள் வழங்கி கொண்டாடும் விவசாய சங்கத்தினர்

By

Published : Sep 18, 2019, 8:08 PM IST

புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்த 15 வருடங்களுக்கு மேலாக காடுகளை அழித்து தைல மரம் என அழைக்கப்படும் யூகலிப்டஸ் மரங்களை நட்டு சுமார் 75 ஆயிரம் ஏக்கர் நிலங்களை வீணாக்கி வந்தனர். யூகலிப்டஸ் மரங்களை வளர்ப்பதால் நிலத்தடி நீர் அதிகளவில் உறிஞ்சப்பட்டு வெப்பம் வெளியிடப்படுவதால் அம்மரங்களின் பக்கத்தில் ஒரு புல்கூட முளைக்க முடியாத அளவிற்கு விஷத்தன்மை வாய்ந்தது.

எனவே இதனை தடை செய்யக்கோரி விவசாயிகள் மற்றும் பல்வேறு இயக்கங்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் நூற்றுக்கும் மேற்பட்ட மனுக்கள் கொடுத்தும், போராட்டங்களை நடத்தியும் எந்த வித பயனும் இல்லாததால் புதுக்கோட்டை விவசாயிகள் சங்க செயலாளர் தனபதி , மணிகண்டன் உள்ளிட்ட விவசாயிகள் இணைந்து மதுரை மாவட்ட உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்தனர்.

இனிப்புகள் வழங்கி கொண்டாடும் விவசாய சங்கத்தினர்

வழக்கை விசாரித்த நீதிபதி தைலமரம் காடுகளால் ஏற்படும் தீமைகள் மற்றும் தைல மரத்தை பரிசோதனை செய்த ஆய்வு தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையின் மூலம் அந்த மரங்கள் மண்ணிற்கு தீங்கு விளைவிப்பது என்று தெரியவந்துள்ளதால், இந்த வழக்கு முடியும் வரை யாரும் தைலமரங்களை நடக்கூடாது என இடைக்கால தடை விதித்து தீர்ப்பளித்தனர். இதனால் மகிழ்ச்சி அடைந்த விவசாயிகள் புதுக்கோட்டை மாவட்ட பேருந்து நிலையம் அருகே இனிப்புகளை வழங்கி மகிழ்ச்சியை தெரிவித்துக்கொண்டனர்.

இதையும் படிங்க:புதுக்கோட்டை மாவட்டத்தில் தலைவிரித்தாடும் தண்ணீர் பஞ்சம்!

ABOUT THE AUTHOR

...view details