புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே தீயத்தூர் கிராமத்தில் திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் திருநாவுகரசர் தனது குடும்பத்துடன் வாக்களித்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், "தமிழ்நாட்டில் உள்ளாட்சி தேர்தல் நடைபெறாமல் இருக்கும் ஒன்பது மாவட்டங்களிலும் உடனடியாக தேர்தல் நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
புதுக்கோட்டையில் நாடாளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசர் வாக்களித்தார்! - உள்ளாட்சி தேர்தல்
புதுக்கோட்டை: தீயத்தூர் வாக்குச்சாவடியில் திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசர் தனது குடும்பத்துடன் வாக்களித்தார்.
மேயர், நகராட்சி சேர்மன், ஒன்றியக் குழுத் தலைவர் உள்ளிட்ட பதவிகளுக்கான வேட்பாளர்களை உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்காமல், மக்களே தேர்ந்தெடுக்கும் விதமாக அத்தேர்தல் நடக்க வேண்டும். அப்படி நடத்தப்பட்டால்தான் குதிரை பேரத்தை தடுக்க முடியும். மேலும் அவர், பாஜகவிற்கு மக்கள் மத்தியில் ஆதரவு சரிந்துள்ளது. அடுத்து வரும் நாடாளுமன்ற தேர்தலில் மத்தியில் காங்கிரஸ் ஆட்சி அமையும். அதுபோல் தமிழ்நாட்டில் வரும் சட்டப்பேரவை தேர்தலில் திமுக-காங்கிரஸ் கூட்டணிதான் வெற்றிபெறும்" என்றார்.
இதையும் படிங்க: பள்ளிகள் விடுமுறையில் மாற்றம் - கூடுதலாக ஒரு நாள் விடுமுறை!