தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

அன்னவாசல் பேரூராட்சியில் சுதந்திரமாக வாக்களிப்பதை உறுதி செய்ய உத்தரவு! - Court orders Pudukkottai Superintendent of Police

அன்னவாசல் பேரூராட்சியில் நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற்ற 9 அதிமுக கவுன்சிலர்களும், தலைவர், துணைத்தலைவர் தேர்தலில் சுதந்திரமாக வாக்களிப்பதை உறுதிப்படுத்த மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளருக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

அன்னவாசல் பேரூராட்சியில் சுதந்திரமாக வாக்களிப்பதை உறுதி செய்ய உத்தரவு!
அன்னவாசல் பேரூராட்சியில் சுதந்திரமாக வாக்களிப்பதை உறுதி செய்ய உத்தரவு!

By

Published : Mar 4, 2022, 9:31 AM IST

மதுரை: புதுக்கோட்டை அன்னவாசலை சேர்ந்தவர்கள் சாலை பொன்னம்மா, திவ்யா, கார்த்திக், உள்ளிட்டோர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு ஒன்றினை தாக்கல் செய்திருந்தனர்.

அதில், "அன்னவாசல் பேரூராட்சியில் மொத்தமுள்ள 15 வார்டுகளில், 9 கவுன்சிலர்கள் அதிமுகவைச் சேர்ந்தவர்கள். அதிமுகவினரே பெரும்பான்மையாக வெற்றி பெற்றுள்ளனர். இந்நிலையில் பிற கட்சிகளை சேர்ந்தவர்கள் கூறும் நபர்களை தலைவர், துணைத் தலைவர் பதவிக்கு தேர்வு செய்யவேண்டுமென மிரட்டல்கள் வருகின்றன.

ஆகையால் அன்னவாசல் பேரூராட்சியில் அதிமுக சார்பில் கவுன்சிலர்களாக தேர்வு செய்யப்பட்ட 9 பேருக்கும் உரிய காவல்துறை பாதுகாப்பு வழங்க புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர், காவல்துறை கண்காணிப்பாளர் ஆகியோருக்கு உத்தரவிட வேண்டும். அன்னவாசல் காவல் ஆய்வாளர் தொல்லை செய்யக்கூடாது எனவும் உத்தரவிட வேண்டும்" என தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த வழக்கு நேற்று (மார்ச் 4) நீதிபதி இளந்திரையன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, தலைவர், துணைத்தலைவரை தேர்வு செய்யும்வரை, 9 கவுன்சிலர்களுக்கும் காவல்துறை பாதுகாப்பு வழங்குவதுடன் , தேர்தலை புதுக்கோட்டை காவல்கண்காணிப்பாளர் கண்காணித்து சுதந்திரமாக நடைபெறுவதை உறுதிப்படுத்தவும் உத்தரவிட்டார்.

இதையும் படிங்க:தமிழ்நாடு குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணைய நியமனங்களுக்கு இடைக்கால தடை

ABOUT THE AUTHOR

...view details