புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி தாலுகா வெண்ணாவல்குடியில் டாஸ்மாக் கடை இல்லாமல் இருந்தது. இப்பொழுது புதிதாக டாஸ்மாக் கடை திறக்க சிலர் ஏற்பாடு செய்து கடையையும் கட்டியுள்ளனர்.
இந்நிலையில், கரோனா பாதிப்பால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட நிலையில் சோற்றுக்கே வழியில்லாமல் திண்டாடுவதாகவும் கடையை திறக்க எதிர்ப்பு தெரிவித்தும் அப்பகுதி மக்கள் மண்ணெண்ணெய் கேன்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர்.