தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கட்டப்பையில் சுற்றி வீசப்பட்ட பச்சிளம் குழந்தை - 15 வயது சிறுமிக்கு பிறந்த குழந்தையா? - pudhukottai news

புதுக்கோட்டை: ஆலடிக்கொல்லை பகுதியில் கட்டப்பையில் சுற்றி வீசப்பட்ட பச்சிளம் ஆண் குழந்தை மீட்கப்பட்டுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டச்செய்திகள்  புதுக்கோட்டை குழந்தை  நிழற்குடையில் கண்டெடுக்கப்பட்ட பச்சிளம் குழந்தை  pudhukottai news  pudhukottai infant
கட்டப்பையில் சுற்றி வீசப்பட்ட பச்சிளம் குழந்தை... 15 வயது சிறுமிக்கு பிறந்த குழந்தையா

By

Published : Aug 13, 2020, 5:05 AM IST

Updated : Aug 13, 2020, 7:09 AM IST

புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அருகே அமைந்துள்ளது ஆலடிக்கொல்லை பகுதி. இப்பகுதியில் அமைந்துள்ள பயணியர் நிழற்குடையில் கிடந்த ஒரு கட்டப்பையில், பிறந்து சில மணி நேரங்களே ஆன பச்சிளம் ஆண் குழந்தை ஒன்று இருந்தது. இதனையடுத்து இதுகுறித்து கீரமங்கலம் கிராம நிர்வாக அலுவலர் புஷ்பராஜ், சமூக நலத்துறைக்கு தகவல் கொடுத்தார்.

இதன் பின்னர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள், குழந்தை நல்ல உடல்நிலையில் இருப்பதாக தெரிவித்தனர். குழந்தையை கட்டப்பையில் வைத்துவிட்டு சென்றது யார் என்பது குறித்து காவல் துறையினர் விசாரித்து வருகின்றனர்.

இதனிடையே, அன்னவாசல் காவல் சரகத்திற்குட்பட்ட கீழக்குறிச்சி கிராமத்தில் 15 வயது சிறுமி ஒருவருக்கு அரசு மருத்துவமனையில் ஆண் குழந்தை பிறந்ததாகவும், அந்த குழந்தை குறித்த விவரம் தற்போது இல்லை என்றும் கூறப்படுகிறது. இதனால் தற்போது இந்தக் குழந்தை அச்சிறுமிக்கு பிறந்த குழந்தையாக என சந்தேகிக்கப்படுகிறது.

இதையும் படிங்க:ஆம்புலன்ஸில் இளம் பெண்ணுக்கு பிரசவம் - மருத்துவ உதவியாளர், பைலட்டுக்குப் பாராட்டு தெரிவித்த மக்கள்!

Last Updated : Aug 13, 2020, 7:09 AM IST

ABOUT THE AUTHOR

...view details