தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

டிப்பர் லாரி மோதியதில் ஒருவர் உயிரிழப்பு... - road accident death

புதுக்கோட்டை: நாகுடி பகுதியில் டிப்பர் லாரி இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் இருசக்கர வாகனத்தில் வந்த பாண்டி (45) என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

road accident
road accident

By

Published : Dec 25, 2020, 5:41 PM IST

தேடாக்கி கிராமத்தை சேர்ந்தவர் பாண்டி. இவர் அவரது மனைவி உடன் இருசக்கர வாகனத்தில் தேடாக்கியிலுருந்து அறந்தாங்கி நோக்கி சென்றுள்ளார்.

அந்த சமயம் அறந்தாங்கியிலிருந்து கட்டுமாவடி சென்று கொண்டிருந்த டிப்பர் லாரி, நாகுடி கடை வீதி திருப்பதி விலாஸ் ஹோட்டல் அருகே வந்த பாண்டியின் இருசக்கர வாகனத்தில் மோதியுள்ளது. அப்போது பாண்டி டிப்பர் லாரியின் பின்பக்க சக்கரத்தில் விழுந்ததில், பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவரது மனைவி சிறு காயங்களுடன் உயிர் தப்பினார். இச்சம்பவம் குறித்து நாகுடி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: கையில் இருந்த செல்போனை பிடுங்கிச் சென்ற திருடர்கள்!

ABOUT THE AUTHOR

...view details