தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

விஜயதசமி: புதுக்கோட்டையில் உள்ள பள்ளிகள், கோயில்களில் வெகு சிறப்பாக நடைபெற்ற வித்யாரம்பம்! - புதுக்கோட்டை செய்திகள்

விஜயதசமியை முன்னிட்டு புதுக்கோட்டையில் உள்ள பள்ளிகள் மற்றும் கோயில்களில் வித்யாரம்பம் எனும் குழந்தைகளின் முதல் கற்றலை துவக்கும் நாள் இன்று நடைபெற்றது.

புதுக்கோட்டையில் உள்ள பள்ளிகள் மற்றும் கோயில்களில் வெகு சிறப்பாக நடைபெற்ற வித்யாரம்பம் நிகழ்ச்சி
புதுக்கோட்டையில் உள்ள பள்ளிகள் மற்றும் கோயில்களில் வெகு சிறப்பாக நடைபெற்ற வித்யாரம்பம் நிகழ்ச்சி

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 24, 2023, 10:15 PM IST

புதுக்கோட்டையில் உள்ள பள்ளிகள் மற்றும் கோயில்களில் வெகு சிறப்பாக நடைபெற்ற வித்யாரம்பம் நிகழ்ச்சி

புதுக்கோட்டை: வித்யாரம்பம் என்பது குழந்தைகளுக்கு முறையாக இசை, நடனம், மொழிகள், நாட்டுப்புற கலை போன்றவை கற்பிக்கப்படுகிறது. இது குழந்தைகளுக்கு எழுத்துக்களை கற்பிக்கும் நாளாகவும் கருதப்படுகிறது. தமிழ்நாட்டில் இதை முதல் எழுத்து என்றும் அழைக்கின்றனர். விஜயதசமி நாள் என்பது நவராத்திரி விழாவின் பத்தாவதும், இறுதி நாளுமாகும், இந்த நாளானது எந்தத் துறையிலும் கற்றலைத் தொடங்க நல்ல நாளாக கருதப்படுகிறது.

கல்வி தெய்வமான, சரஸ்வதி மற்றும் ஆசிரியர் (குரு) ஆகியோருக்கு குரு தட்சணை கொடுத்து மரியாதை செய்ய வேண்டிய நாளாக விஜயதசமி கருதப்படுகிறது. ஒவ்வொரு வருடமும் ஆயிரக்கணக்கான மக்கள் இந்த நாளில் கோயில்களுக்கு வந்து தங்கள் குழந்தைகளை கற்றலில் ஈடுபடுத்துவது வழக்கமாக உள்ளது.

இன்று விஜயதசமியை முன்னிட்டு புதுக்கோட்டையில் உள்ள சமஸ்கிருத ஓரியண்டல் வித்யாலயா, குலபதி பாலையா பள்ளி, வெங்கடேஸ்வரா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி உள்ளிட்ட பள்ளிகள் மற்றும் மனோன்மணி அம்மன் கோயில் உள்ளிட்ட பல்வேறு கோயில்கள் உள்ளிட்ட இடங்களில் வித்யாரம்பம் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் கோயிலில் நடைபெற்ற வித்யாரம்ப நிகழ்ச்சியில் குருக்கள் வேத மந்திரங்கள் முழங்க பெற்றோர்கள் முன்னிலையில் தாம்பூல தட்டில் நெல் பரப்பி, தமிழில் "அ" என்னும் முதல் எழுத்தை குழந்தைக்கு எழுத கற்றுக் கொடுத்தனர். இதே போல் வெங்கடேஸ்வரா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் பெற்றோர்கள் தாம்பூலத்துடன் குழந்தைகளை அழைத்து வந்து, வித்யாரம்பம் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

இதையடுத்து குழந்தைகளுக்கு பரிசு பொருட்கள் வழங்கப்பட்டது. வித்யாரம்பம் நிகழ்ச்சியில் ஆர்வமுடன் கலந்து கொண்ட குழந்தைகள் பலர் ஆர்வமுடன் நெல்லில் எழுத்து எழுதி, தங்களது முதல் கற்றலை தொடங்கினர்.

இதையும் படிங்க: தமிழ்நாட்டிற்கு நீட் வேண்டாம்; வேறு மாநிலங்களில் வேண்டுமானால் இருக்கட்டும்: ப.சிதம்பரம் கருத்து!

ABOUT THE AUTHOR

...view details