புதுக்கோட்டை:அன்னவாசல் அருகே கைவேலிபட்டியைச் சேர்ந்த மேலேபாறைகளத்தில் உள்ள குளத்திற்கு, குடுமியான்மலையைச் சேர்ந்த ஓய்வு பெற்ற தபால்காரரான வெங்கடேசன்(72) என்பவர் குளிக்க சென்றபோது குளத்தில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
குளிப்பதற்காக சென்றவர் நீண்ட நேரம் ஆகியும் வீடு திரும்பாததால் சந்தேகம் அடைந்த உறவினர்கள் குளத்தில் அவர் சடலமாக மிதப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்து தகவலறிந்த இலுப்பூர் தீயணைப்புத்துறையினர் அவரின் சடலத்தை நேற்று (அக்.31) மீட்டு பிரேத பரிசோதனைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பினர்.