புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு இந்த மாதம் 27, 30 ஆகிய இரண்டு தேதிகளில் வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.
அந்த வகையில் அன்னவாசல், விராலிமலை, குன்றாண்டார்கோவில், புதுக்கோட்டை, கந்தர்வக்கோட்டை, கறம்பக்குடி ஆகிய ஊராட்சி ஒன்றியங்களுக்குட்பட்ட கிராம ஊராட்சிகளில் 27ஆம் தேதி அன்றும், அறந்தாங்கி, அரிமளம், ஆவுடையார்கோவில், பொன்னமராவதி, மணமேல்குடி, திருமயம், திருவரங்குளம் ஆகிய ஊராட்சி ஒன்றியங்களுக்குட்பட்ட கிராம ஊராட்சிகளில் 30ஆம் தேதி அன்றும் வாக்குப்பதிவு நடைபெறும்.
உள்ளாட்சித் தேர்தல்களுக்கான வேட்பு மனுக்கள் தாக்கல் ஒன்பதாம் தேதி முதல் 16ஆம் தேதி வரை, விடுமுறை நாட்கள் தவிர்த்து பிற நாட்களில் அதற்கென வரையறுக்கப்பட்ட இடங்களில் காலை 10.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை பெறப்படும். பெறப்படும் வேட்பு மனுக்கள் 17ஆம் தேதி அன்று காலை 10.00 மணிக்கு பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படும்.