புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே உள்ள இடையூர் கிராமங்களில் தண்ணீர் பஞ்சம் தலைவிரித்தாடுகிறது. இதனால் தங்கள் கிராம இளைஞர்களுக்கு பெண் கொடுக்க மறுக்கிறார்கள் எனவும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அப்பகுதி மக்கள் இன்று மனு கொடுத்தனர். இக்கிராமத்தில் 100 குடும்பங்களுக்கு மேல் வசித்துவருகின்றனர்.
தண்ணீர் இல்லாததால் பெண் தர மறுப்பு! இடையூர் இளைஞர்கள் ஏக்கம்
புதுக்கோட்டை: வறட்சி காரணமாக தண்ணீர் பஞ்சம் இருப்பதால் தங்களது ஊரில் உள்ள இளைஞர்களுக்கு பெண் கொடுக்க மறுப்பதாகக் கூறி இடையூர் கிராம மக்கள் கலங்கிநிற்கின்றனர்
தண்ணீர் இல்லை... மணமுடிக்க பெண்ணும் இல்லை...!
இது குறித்து அப்பகுதி மக்களிடம் கேட்டபோது, தண்ணீர் வசதி சாலை வசதி எதுவுமே எங்களுக்கு இல்லாமல், மிகவும் சிரமப்பட்டு கொண்டிருக்கிறோம். தண்ணீரே இல்லாமல் எப்படி வாழ முடியும். ஊரில் வயதானவர்கள் நிறைய பேர் இருக்கின்றனர்.
தண்ணீர் இல்லாமல் ஐந்து கிலோமீட்டருக்கு அப்பால் இருக்கும் குளத்தில் இருந்து தண்ணீர் எடுத்து வருகிறோம். தண்ணீர் வசதி கேட்டு எங்களது ஊரில் அலுவலர்களிடம் நிறைய மனுக்கள் கொடுத்தும் எந்தவித நடவடிக்கையும் இல்லை என மக்கள் புலம்பிவருகின்றனர்.