புதுக்கோட்டையில் அமைச்சர் விஜயபாஸ்கர் நேற்று (அக். 30) செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது அவர் கூறுகையில், "அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 விழுக்காடு இடஒதுக்கீடு சட்டத்திற்கு ஆளுநர் ஒப்புதல் அளித்ததற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம். இந்த வரலாற்றுச் சிறப்பு மிக்க சட்டம் தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் சீரிய தொலைநோக்குப் பார்வையில் உதித்த திட்டமாகும்.
அரசு பள்ளி மாணவர்களுக்கான இடஒதுக்கீடு சட்டத்தின் வெற்றியில் ஆளும் அதிமுக அரசுக்குதான் முழு பங்கு உள்ளது. இந்த திட்டத்தின் வெற்றியில் எந்த ஒரு எதிர்க்கட்சியும் பங்கு போட முடியாது.
மக்கள் கேட்காமலேயே, எதிர்க்கட்சிகள் எந்த ஒரு கோரிக்கையும் வைக்காமல் முதலமைச்சர் பழனிசாமி இந்தத் திட்டத்தை முன்மொழிந்து செயல்படுத்தி உள்ளார். இது முழுக்க முழுக்க அதிமுக அரசின் சாதனை ஆகும். இந்த வெற்றியில் யாருக்கும் பங்கு கிடையாது” என்று தெரிவித்தார்.
அமைச்சர் விஜயபாஸ்கர் செய்தியாளர் சந்திப்பு இதையும் படிங்க...டெங்குவை கட்டுப்படுத்தும் பணி தீவிரம் - அமைச்சர் விஜயபாஸ்கர்