புதுக்கோட்டை மாவட்டம் மேல செட்டியாபட்டியைச் சேர்ந்தவர் பாலமுருகன். தெற்கு செட்டியாபட்டியைச் சேர்ந்தவர் பாண்டிச்செல்வி. பல வருடங்களாகக் காதலித்து வந்த இவர்கள், குடும்பத்தினருக்குத் தெரியாமல் புதுக்கோட்டை அருகேயுள்ள குமரமலை முருகன் கோயிலில் திருமணம் செய்துகொண்டனர்.
பெற்றோர்களால் தங்களுக்கு ஏதேனும் அசம்பாவிதங்கள் நிகழ வாய்ப்புள்ளதாக சந்தேகித்த இருவரும் சம்பட்டிவிடுதி காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர்.
இதையடுத்து, காவல் நிலையத்தில் வாக்குவாத்தில் ஈடுபட்ட உறவினர்களிடம் இருவரும் திருமண வயதை எட்டியிருப்பதால்சட்டப்படி திருமணம் செல்லும் என்றும், இவர்களை பாதிக்கும் விதமான நடவடிக்கைகளில் ஈடுபடக்கூடாது என்றும் எழுத்துப்பூர்வமாக உறுதியளிக்குமாறும் காவல் துறையினர் கேட்டுக்கொண்டனர்.
இதனையடுத்து, காதல் ஜோடியினை காவல் துறையினர் வீட்டிற்கு அனுப்பி வைத்தனர்.
இதையும் படிங்க:உயிருக்கு பாதுகாப்பு கேட்டு காவல் துறையிடம் தஞ்சமடைந்த காதல் ஜோடி