புதிய வேளாண் திருத்த சட்டம்: காங்கிரஸ் ஆர்ப்பாட்டம் - காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
புதுக்கோட்டை: புதிய வேளாண் திருத்த சட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி புதுக்கோட்டை நகர காங்கிரஸ் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
![புதிய வேளாண் திருத்த சட்டம்: காங்கிரஸ் ஆர்ப்பாட்டம் ஆர்ப்பாட்டம்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-08:24:21:1601002461-tn-pdk-03-congress-protest-visual-scr-img-7204435-24092020184202-2409f-1600953122-846.jpg)
ஆர்ப்பாட்டம்
புதிய வேளாண் திருத்த சட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி தமிழ்நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதில் ஒரு பகுதியாக புதுக்கோட்டை நகர காங்கிரஸ் கட்சி சார்பில் சின்னப்ப பூங்காவில் மத்திய, மாநில அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் ஏராளமான காங்கிரஸ் கட்சியினர் கலந்துகொண்டு கோஷங்கள் எழுப்பினர். காவல் துறையினர் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய பின்பு ஆர்ப்பாட்டத்தை நிறுத்தினர்.