புதுக்கோட்டை சிப்காட் அருகே உள்ள தீயணைப்பு நிலைய வளாகத்தில் வேப்பமரம் உள்ளது. இந்த மரத்தில் இருந்து இன்று திடீரென பால் வழிந்தோடியது. இதனை அவ்வழியாக சென்ற சிலர் பார்த்து ஆச்சரியம் அடைந்தனர்.
வேப்பமரத்தில் வழிந்தோடிய பால் - கற்பூரம் ஏற்றி வழிபட்ட பொதுமக்கள் - வேப்பமரத்தில் வழிந்தோடிய பால்
புதுக்கோட்டை: சிப்காட் அருகேயுள்ள வேப்பமரத்தில் பால் வடிந்ததையடுத்து அப்பகுதி மக்கள் மரத்திற்கு மலர் அணிவித்து வணங்க தொடங்கிய சம்பவம் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.
Neem tree
இதையடுத்து வேப்பமரத்தில் பால் வடிகிறது என்பதையறிந்த அப்பகுதி மக்கள் ஏராளமானோர் அங்கு திரண்டனர். பொதுமக்களில் சிலர் வேப்ப மரத்தில் அம்மன் இருப்பதாகவும், அதனால் பால் வடிவதாகவும் பேசிக்கொண்டனர்.
பின்னர் அந்த மரத்திற்கு மஞ்சள் பூசி, குங்குமம் வைத்து, மரத்தின் அருகே கோலமிட்டு கற்பூரம் ஏற்றி வழிபட்டனர். மேலும் இதுகுறித்து தகவலறிந்த சுற்றுப்புற பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் இந்த அதிசய நிகழ்வை பார்க்க அப்பகுதியில திரண்டனர்.