புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே உள்ள தெற்கு நெல்லிபட்டியில் ஏழு மாதமாக பேருந்து வசதி இல்லாமல் மக்கள் திணறி வருகின்றனர். இதுகுறித்து அவர்கள் கூறுகையில், எங்களது ஊரில் ஆயிரம் பேருக்கு மேல் வசித்து வருகிறோம். கஜா புயலின் போது சாலை பாதிப்புக்குள்ளானது. அதனால் தற்காலிகமாக பேருந்து சேவை நிறுத்தி வைக்கப்பட்டது.
கஜா புயல் தாக்குதல்: பேருந்து வசதி வேண்டி மனு! - புதுக்கோட்டை
புதுக்கோட்டை: அறந்தாங்கி அருகே உள்ள தெற்கு நெல்லிபட்டி பகுதியில் மீண்டும் பேருந்து வசதி ஏற்படுத்தவில்லையென்றால், சாலை மறியலில் ஈடுபடபோவதாக அப்பகுதி மக்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
பின்னர், சாலையில் சீர் செய்தும் இன்று வரையில் பேருந்து எங்களது கிராமத்திற்கு வரவில்லை. குழந்தைகள் பள்ளி செல்வதற்கு, வயதானவர்கள் மருத்துவமனை செல்வதற்கு என அனைத்திற்கும் மிகவும் சிரமமாக இருக்கிறது. பேருந்து வசதி இல்லாததால் எங்குமே செல்ல முடியவில்லை. தற்போது மனு கொடுப்பதற்கு 5 கி.மீ நடந்து வந்துள்ளோம். இதுவரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மூன்று முறை மனு கொடுத்திருக்கிறோம். எவ்வித நடவடிக்கையும் இல்லை, உடனடியாக நடவடிக்கை எடுக்காவிட்டால் நடவடிக்கை எடுக்கும் வரை சாலை மறியல் செய்வோம் என்று தெரிவித்தனர்.