தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

டோல்கேட்டில் வரி செலுத்த மறுப்பு; நாம் தமிழர் பிரமுகருக்கு அடி உதை! - Naam Tamilar Katchi worker issue

புதுக்கோட்டை: டோல்கேட்டில் வரி செலுத்த மறுத்த நாம் தமிழர் கட்சியின் பிரமுகர் வினோத் என்பவரை சுங்கச்சாவடி ஊழியர்கள் அடித்து துவைத்தெடுத்துள்ளனர்.

naam tamilar katchi worker attacked by tollgate employees

By

Published : Oct 23, 2019, 1:02 PM IST

நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் திருச்சி தொகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிட்டு தோல்வி அடைந்தவர் வினோத். இவர் திருச்சியில் இருந்து காரைக்குடிக்குச் சென்றுகொண்டிந்தபோது மாத்தூர் சுங்கச்சாவடியில் வரி செலுத்த மறுத்தது மட்டுமின்றி, ஊழியர்களுடன் தனது அரசியல் பலத்தைக் கூறி மிரட்டல் விடுக்கும் தொணியில் பேசியுள்ளார்.

நாம் தமிழர் கட்சி வேட்பாளர் வினோத்

முதலில் சுங்கச்சாவடியில் பணிபுரிபவர்கள் மவுனம் காத்து அவர்களை ஒன்றும் சொல்லாமல் விட்டு விட்டனர். வினோத் காரைக்குடியில் தனது பணியை முடித்துவிட்டு மீண்டும் வரும்போது சுங்கச்சாவடியில் பணிபுரிபவர்கள் வழிமறித்து வினோத்தை கடுமையாக தாக்கியுள்ளனர். இதனால் வினோத் ரத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இதைத்தொடர்ந்து நேற்று நாம் தமிழர் கட்சியினர் 100க்கும் மேற்ப்பட்டோர் அதே சுங்கச்சாவடியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வராஜ் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதாக உறுதி கூறிய பிறகு போராட்டத்தைக் கைவிட்டனர். தொடர் அழுத்தத்தின் காரணமாக மாத்தூர் காவல் துறையினர் வினோத்தை தாக்கியவர்கள் மீது முதல் தகவல் அறிக்கை (FIR) பதிவு செய்தனர்.

இதில் மொத்தம் 17 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர். அதில் தமிழ், சந்துரு, ஆனந்த், குணா என்ற நான்கு நபர்களைக் காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.

  • 147 - கலகம் செய்தல்.
  • 148 - அபாயகரமான ஆயுதத்தோடு கலகம் செய்தல்.
  • 294(b) - ஆபாச வார்த்தைகளால் திட்டுதல்.
  • 324 - கொடூரமான ஆயுதத்தால் தாக்குதல்.
  • 506(2) - மிரட்டல்.

ஆகிய 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு கீரனூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளனர்.

இதையும் படிக்க: கத்தியால் குத்தி முதியவர் கொலை! முகமூடி நபர்களுக்கு போலீஸ் வலை!

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details