புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர் அருகே உள்ள கோயில்நாங்குப்பட்டியில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி இயங்கி வருகிறது. இப்பள்ளியில் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை 45 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று பள்ளியில் சில குழந்தைகளுக்கு காய்ச்சல் மற்றும் வாந்தி ஏற்பட்டு உள்ளது. இது குறித்து, பெற்றோர்களுக்கு தகவல் தெரிவித்து குழந்தைகளை வீட்டிற்கு அழைத்துச் செல்லும்படி கூறியுள்ளனர்.
பள்ளிக் குழந்தைகள் 20 பேருக்கு காய்ச்சல் - மருத்துவமனையில் அனுமதி - government hospital
புதுக்கோட்டை: இலுப்பூர் அருகே 20 பள்ளிக் குழந்தைகளுக்கு மர்மக் காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதில் சுமார் 20-க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு காய்ச்சல் பாதிப்பு எற்பட்டுள்ளது. இந்நிலையில், நேற்று நள்ளிரவு 12 மணிக்கு மேல் குழந்தைகளுக்கு அதிகமான காய்ச்சல் ஏற்பட்டடுள்ளது. இதையடுத்து, அன்னவாசல் இலுப்பூர் கீரனூர் பகுதியில் உள்ள அரசு மருத்துவமனையில் குழந்தைகள் அனுமதிக்கப்பட்டு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பள்ளிக் குழந்தைகளுக்கு எதனால் காய்ச்சல் ஏற்பட்டுள்ளது என்பது ஆய்வுக்குப் பின்னரே தெரியும் என சுகாதாரத்துறையினர் தெரிவித்துள்ளனர்.