திருத்துறைப்பூண்டி நகராட்சியில் சுகாதார ஆய்வாளராக வெங்கடாசலம் என்பவர் பணிபுரிந்து வந்தார். இவர் அப்பகுதியில் தினசரி காய்கறி சந்தையினை இடமாற்றம் செய்த இடத்தில், மீன் விற்பனை செய்து வந்த ஒருவரைத் தட்டிக் கேட்டார். அப்போது மீன் வியாபாரி, சுகாதார ஆய்வாளர் வெங்கடாசலத்தை அரிவாளால் வெட்டியுள்ளார்.
இச்சம்பவம் குறித்து திருத்துறைப்பூண்டி நகராட்சி ஆணையர் காவல் துறையிடம் புகார் அளித்துள்ளார். அதன் ஒரு பகுதியாக அறந்தாங்கி நகராட்சி வளாகத்தில், நகராட்சி ஆணையர் (பொறுப்பு) முத்து கணேசன் தலைமையில் அறந்தாங்கி சுகாதார ஆய்வாளர் சேகர், நகராட்சி அலுவலர்கள் அன்பழகன், சுப்பிரமணியன், ஆத்மநாதன், மதியழகன், சக்தி உள்ளிட்டோர் வெங்கடாசலம் மீது தாக்குதல் நடத்திய கல்விபிரியனை கைது செய்யக்கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.