தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டம் சாத்தியப்படாது' - திருநாவுக்கரசு

புதுக்கோட்டை: "ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டம் என்பது நடைமுறைக்கு சாத்தியப்படாது. ஒரே நாடு என்ற போர்வையில் நாட்டை பாஜக, பிரிக்க நினைக்கிறது" என்று, மக்களவை உறுப்பினர் திருநாவுக்கரசு குற்றஞ்சாட்டியுள்ளார்.

திருநாவுக்கரசு

By

Published : Jun 30, 2019, 4:26 PM IST

புதுக்கோட்டையில் தைல மரக் காடுகள் பற்றிய விழிப்புணர்வு பேரணியை மக்களவை உறுப்பினர் திருநாவுக்கரசர் தொடங்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "தமிழ்நாட்டில் கடுமையான தண்ணீர் பஞ்சம் நிலவி வருகிறது. அதனை அரசாங்கம் கருத்தில் கொண்டு மாற்று வழியை உடனடியாக செய்ய வேண்டும். ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு லாரிகள் மூலம் தண்ணீர் அனுப்புவதற்கு அரசாங்கம் ஏற்பாடு செய்ய வேண்டும்.

காங்கிரஸ் கட்சியிலிருந்து கராத்தே தியாகராஜன் அணி லீக் டி20 மாநில அமைப்பின் செயல் அது. ஒரு கட்சியில் இருந்து உறுப்பினரை சேர்ப்பதும், நீக்குவதும் அந்தக் கட்சியின் அதிகாரம். ஒரே நாடு ஒரே ரேஷன் கடை திட்டம் என்பது நடைமுறைக்கு சாத்தியப்படாது. 'ஒரே நாடு என்ற போர்வையில் நாட்டை பிரிக்க நினைக்கிறது பாஜக" என்று குற்றம்சாட்டினார்.

திருநாவுக்கரசு

ABOUT THE AUTHOR

...view details