புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி பெரியார் நகரைச் சேந்தவர் கணேசன். இவரது மனைவி அழகியும் இவரும் மேலைச்சிவபுரியில் ஒரு கட்டிட வேலைக்குச் சென்றுவிட்டு, இன்று மாலை இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பியுள்ளனர்.
இந்நிலையில், இவர்கள் ஏனாதி பேருந்து நிறுத்தம் அருகே சென்று கொண்டிருக்கும் போது, எதிரே அதிவேகமாக வந்த டிப்பர் லாரி மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் படுகாயமடைந்த அழகி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதையடுத்து விபத்தில் படுகாயமடைந்த கணேசனை அருகிலிருந்தவர்கள் மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.