புதுக்கோட்டை அறந்தாங்கி அடுத்துள்ள மேல்மங்களம் கிராமத்தைச் சேர்ந்த தம்பதியர் ராமன்-பொட்டுமணி. இவர்களுக்கு ரவிக்குமார், பாலசுப்பிரமணி, திருமூர்த்தி என்ற மூன்று மகன்கள் உள்ளனர். இதில் ரவிக்குமார் என்பவர் ஏற்கனவே இறந்துவிட்ட நிலையில், மற்ற இருவரும் வெளியூர்களில் வேலை செய்துவருகின்றனர்.
இந்நிலையில் பாலசுப்பிரமணி அருள் அமுதா என்ற பெண்ணை கலப்பு திருமணம் செய்தாதல், ராமன் தனது சொத்தில் பாகம் பிரித்து கொடுத்துள்ளார். அந்த வாய்ப்பினைப் பயன்படுத்திய அருள் அமுதா, முழு சொத்தையும் யாருக்கும் தெரியாமல் தனது பெயரில் மாற்றியுள்ளார்.
இதைத்தொடர்ந்து பொட்டுமணி தனது மற்றொரு மகனான திருமூர்த்திக்கு வீடு கட்டுவதற்காக, அடிக்கல் நாட்டியுள்ளார். இதனால் மாமியார் பொட்டுமணிக்கும், மருமகள் அருள் அமுதாவிற்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.