தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கணவன் வேறொரு பெண்ணுடன் மாயம் - 2 பிள்ளைகளுடன் தீக்குளித்த மனைவி - இரண்டு பிள்ளைகளுடன் தாய் தீக்குளித்து தற்கொலை

புதுக்கோட்டை: அறந்தாங்கி அருகே குடும்பத்தகராறு காரணமாக இரண்டு பிள்ளைகளுடன் தாய் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

அறந்தாங்கியில் குடும்பத் தகராறில் தாய் இரண்டு குழந்தைகளுடன் தீக்குளித்து தற்கொலை
அறந்தாங்கியில் குடும்பத் தகராறில் தாய் இரண்டு குழந்தைகளுடன் தீக்குளித்து தற்கொலை

By

Published : Sep 11, 2020, 7:00 AM IST

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே உள்ள வல்லம்பக்காடு கிராமத்தை சேர்ந்தவர் முத்து, இவரது மனைவி ராதா. இவர்களுக்கு அபிஷேக், அபிரித் ஆகிய 2 மகன்கள் இருக்கிறார்கள். முத்துவுக்கு வேறொரு பெண்ணுடன் உறவு இருந்ததால், கணவன் மனைவிக்கிடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டுள்ளது. செப்டம்பர் 9ஆம் தேதி முத்து வேறு ஒரு பெண்ணுடன் சென்றதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் மனமுடைந்த ராதா, இரண்டு மகன்களுக்கு உணவு கொடுத்து தூங்க வைத்துவிட்டு, ஏற்கனவே வாங்கி வைத்திருந்த பெட்ரோலை பிள்ளைகள் மீதும், தன் மீதும் ஊற்றி பற்றவைத்துள்ளார். தீப்பற்றி எரிந்தவர்களின் அலறல் சத்தம் கேட்டு அருகிலிருந்தவர்கள் உடனடியாக கதவை உடைத்து மூன்று பேரையும் மீட்டனர்.

ராதா, இளைய மகன் அபிரித் இருவரும் சம்பவ இடத்திலேயே இறந்தனர். படுகாயங்களுடன் மூத்த மகன் அபிஷேக் அறந்தாங்கி அரசு மருத்துவமனைக்கு கொண்டுவரப்பட்டு முதலுதவி சிகிச்சைக்குப் பின், மேல் சிகிச்சைக்காக புதுக்கோட்டைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி அவரும் உயிரிழந்தார்.

கணவனின் தவறான நடத்தையால் மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள் உயிரிழந்திருப்பது அனைவரையும் வேதனை அடையச் செய்துள்ளது. இதுகுறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ABOUT THE AUTHOR

...view details