தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'விரைவில் நாடு திரும்ப வேண்டும்' - இளைஞரின் காணொலி பதிவு - புதுக்கோட்டை இளைஞரின் வீடியோ பதிவு

புதுக்கோட்டை: வெளிநாடுகளில் படிக்கும் மாணவர்களை மீட்க வேண்டும் என்று பிலிப்பைன்சில் படிக்கும் மாணவர் ஒருவர் தன்னுடைய பெற்றோருக்கு காணொலி ஒன்றை அனுப்பியுள்ளார்.

இளைஞரின் வீடியோ பதிவு
இளைஞரின் வீடியோ பதிவு

By

Published : Mar 22, 2020, 9:15 AM IST

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதியைச் சேர்ந்த வெங்கட்ராமன் என்பவரின் மகன் மோனிஸ்கரன் பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில் மருத்துவக் கல்லூரியில் மூன்றாமாண்டு படித்துவருகிறார்.

இந்நிலையில் மோனிஸ்கரன், தனது பெற்றோருக்கு அனுப்பிய காணொலியில், "கரோனா வைரஸ் உலகெங்கிலும் பரவிவரும் நிலையில் இங்கு சூழ்நிலைகள் ஏதும் சரியில்லை. பிலிப்பைன்ஸ் நாட்டில் முகக்கவசம், சானிடைசர் போதிய அளவில் கிடைக்கவில்லை" என்று கூறியுள்ளார்.

இளைஞரின் வீடியோ பதிவு

மேலும், "இங்கு படிக்கும் சுமார் 400-க்கும் மேற்பட்ட இந்திய மாணவர்கள் கடந்த 14ஆம் தேதி இந்தியா புறப்படத் தயாராக இருந்த நிலையில் விமான நிலையத்தில் எங்களை அனுமதிக்கவில்லை. இந்தியா செல்ல எங்களுக்கு அரசு அனுமதி அளிக்கவில்லை என்று கூறிவருகின்றனர்.

இந்தியா சென்று எங்களுக்குத் தேவையான மருத்துவப் பரிசோதனை நாங்கள் செய்ய தயாராக உள்ளோம். எங்களை இந்தியாவுக்கு அழைத்துச் செல்ல மத்திய-மாநில அரசுகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று அவர் கூறியிருந்தார்.

இதனையடுத்து அங்கு படிக்கும் 400-க்கும் மேற்பட்ட இந்திய மாணவர்களை மீட்க வேண்டும் என்று புதுக்கோட்டை பகுதிவாழ் பெற்றோர்கள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.

இதையும் படிங்க:

குட் பை தமுக்கம் மைதானம்!

ABOUT THE AUTHOR

...view details