புதுக்கோட்டை:புதுக்கோட்டையில் முக்குலத்தோர் புலிப்படையின் 12 கோரிக்கைகளை வலியுறுத்தி பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட பின்னர் முக்குலத்தோர் புலிப்படையின் தலைவரும், சட்டப்பேரவை உறுப்பினருமான கருணாஸ் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது, "கூட்டணிக் கட்சியாக இருந்தாலும் நான் இரட்டை இலை சின்னத்தில் தான் கடந்த தேர்தலில் போட்டியிட்டேன். அதன்படி தான் தற்போது வரை செயல்பட்டு வருகிறேன். அதிமுகவின் உள்கட்சி பிரச்சனையில் நாம் தலையிட கூடாது என்றார்.
சசிகலா தன்னை முதலமைச்சர் ஆக்கவில்லை என்று முதலமைச்சர் பழனிசாமி கூறி வருவது குறித்த கேள்விக்கு, 'கூவத்தூரில் என்ன நடந்தது என்று அங்கு இருந்த எம்எல்ஏக்கள், எம்பிக்கள் உள்ளிட்ட நிர்வாகிகளுக்கு நன்றாக தெரியும். தற்போது அங்கு நடைபெற்றதை நான் கூறமாட்டேன், அதற்கென்று நேரம் காலம் வரும் போது கூறுவேன்.