தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

அறந்தாங்கி, காணமல் போன சிறுமி சடலமாக மீட்பு! - தமிழ் குற்ற செய்திகள்

புதுக்கோட்டை: அறந்தாங்கி அருகே காணாமல் போன சிறுமி, சடலமாக கண்டெடுக்கப்பட்டார்.

Missing girl's body found near Aranthangi
Missing girl's body found near Aranthangi

By

Published : Jul 2, 2020, 10:07 AM IST

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகேயுள்ள ஏம்பல் கிராமத்தில் வசித்து வருபவர் நாகூரான், இவரது மகள் ஜெயபிரியா (7). இந்தச் சிறுமி நேற்று முன்தினம் மாயமானார். இதையடுத்து நாகூரான் ஏம்பல் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

இந்தப் புகாரின் அடிப்படையில் காவலர்கள் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவந்தனர். இந்நிலையில் நேற்று மாலை அப்பகுதியிலுள்ள கிளவிதம் ஊரணி பகுதியில் சிறுமி ஜெயபிரியா இறந்த நிலையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டார்.

பின்னர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர், சிறுமியின் உடலத்தை மீட்டு புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரிக்கு உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பிவைத்தனர்.

இதனையடுத்து, சம்பவ இடத்திற்கு நேரடி விசாரணை செய்வதற்காக புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருண்சக்திகுமார், சம்பவ இடத்தை நேரில் சென்று ஆய்வு செய்தனர். மேலும் இச்சம்பவம் தொடர்பாக சிறுமியின் பக்கத்து வீட்டில் உள்ள ராஜா(26) என்பவரை காவல்துறையினர் தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.

ABOUT THE AUTHOR

...view details