தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

அனைத்து சிறைக் கைதிகளுக்கும் தடுப்பூசி போடப்படும் - அமைச்சர் ரகுபதி! - Environment Minister V. Meyyanathan

தமிழ்நாட்டில் அனைத்து சிறைக் கைதிகளுக்கும் தடுப்பூசி போடப்படும் என சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.

அமைச்சர் ரகுபதி
அமைச்சர் ரகுபதி

By

Published : Jun 1, 2021, 8:51 AM IST

புதுக்கோட்டை: அரசு மருத்துவமனைகள், மருத்துவக் கல்லூரிகள் தவிர மற்ற பகுதிகளில் பிளீச்சிங் பவுடர் போடுவது தடை செய்யப்பட்டுள்ளது என சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் தெரிவித்துள்ளார்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் இன்று(ஜூன்.1) முதல் அனைத்து கிராமங்களிலும் அந்தந்த உள்ளாட்சிகள் சார்பில் காய்ச்சல் கண்டறியும் முகாம், ஆக்ஸிஜன் அளவு கண்டறியும் முகாம் ஆகியவை நடைபெற உள்ளது. அதற்காக அனைத்து உள்ளாட்சிகளுக்கும் ஆக்ஸிஜன் அளவு கண்டறியும் பல்ஸ் ஆக்சி மீட்டர் கருவிகள், வெப்பநிலை கண்டறியும் கருவி ஆகியவை வழங்கும் விழா நேற்று(மே.31) மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் அமைச்சர்கள் ரகுபதி, மெய்யநாதன் ஆகியோர் உள்ளாட்சி அமைப்புகளுக்கு கருவிகளை வழங்கினார்கள்.

இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, 'தமிழ்நாட்டில் உள்ள சிறைச்சாலைகளில் சிறைக் கைதிகளுக்குக் கரோனா கண்டறியும் முகாம்கள் சிறைச்சாலைக்குள் நடத்தப்பட்டு வருகிறது. இதுவரை 72 சிறைக்கைதிகளுக்கு கரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டு, சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.

மேலும் சிறைக் கைதிகளுக்கு தடுப்பூசிகள் போடும் பணியும் தற்போது முடுக்கிவிடப்பட்டுள்ளது. தற்போது விருப்பப்படும் சிறைக் கைதிகளுக்கு மட்டும் தடுப்பூசி போடப்படுகிறது. இனிவரும் காலங்களில் அனைவருக்கும் கட்டாயப்படுத்தி தடுப்பூசி செலுத்தப்படும்.

அண்ணா பல்கலைக்கழகம், பள்ளிக்கல்வித்துறை ஆகியவை பொறியியல் கல்லூரிகள், 12ஆம் வகுப்பு மாணவர்களுக்குத் தேர்வு நடத்தப்படும் என்று அறிவித்துள்ளது. ஆனால், சட்டக்கல்லூரி மாணவர்களுக்குத் தேர்வு நடத்துவது தொடர்பாக இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. கரோனா தொற்று நோயாளிகளுக்கு உதவும் வகையில் உறவினர்கள் அனுமதிக்கப்படுவது தவறு. அவர்களுக்கு உடனடியாக பரிசோதனை எடுக்கப்பட்டு அவர்கள் வெளியேற்றப்படுவார்கள்' எனத் தெரிவித்தார்.

அதன் பின்னர் செய்தியாளரிடம் பேசிய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன், 'தமிழ்நாடு முழுவதும் தேவைப்படும் இடங்களில் குறிப்பாக மருத்துவமனைகளில் பிளீச்சிங் பவுடர் கிருமிநாசினி அடிக்கலாம். ஆனால், கிராமப்புறங்களில் மட்டுமல்லாது மற்றப் பகுதிகளில் பிளீச்சிங் பவுடர் போடுவது கிருமிநாசினி அடிப்பதால் எந்தவிதப் பயனும் இல்லை.

இதனால் சுற்றுச்சூழலுக்கு கேடு ஏற்படுமே தவிர கரோனா கண்டிப்பாக குறையாது. இதைப் பயன்படுத்த வேண்டாம் என்று உலக சுகாதார நிறுவனமும் ஏற்கெனவே அறிவித்துள்ளது. இந்த நடைமுறை தமிழ்நாடு முழுவதும் பின்பற்றப்படும்.

இது மற்ற பகுதிகளில் தடை செய்யப்பட்டுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் தேவையான இடங்களில் நேரடி கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட உள்ளன. அங்கு விவசாயிகளிடம் எந்த விதமான கமிஷனும் பெறாமல் நெல் கொள்முதல் செய்யப்படும்.

வரும் ஜுன் 12ஆம் தேதி காவிரியில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டால், கடைமடை பகுதியான புதுக்கோட்டை வரை காவிரி நீர் வந்து செல்வதற்கு ஏதுவாக, தற்போது போர்க்கால அடிப்படையில் வாய்க்கால்கள் தூர்வாரப்பட்டு வருகிறது' எனக் கூறினார்.

இதையும் படிங்க: கரோனாவால் உயிரிழக்கும் செய்தியாளர்களின் வாரிசுகளுக்கு இழப்பீட்டுத் தொகை ரூ.10 லட்சமாக உயர்வு!

ABOUT THE AUTHOR

...view details