புதுக்கோட்டை மாவட்டத்தில் சுகாதாரப் பணி புதிய அலுவலக கட்டட பூமி பூஜை விழா இன்று நடைபெற்றது. இந்த விழாவில் சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கலந்துகொண்டார்.
பின்னர், செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் விஜயபாஸ்கர், “விஷக்கடிகளுக்கு சிகிச்சையளிக்கும் வகையில் தஞ்சாவூரில் 5 கோடி ரூபாய் மதிப்பீட்டில் விஷக்கடியால் பாதிக்கப்பட்டவர்களுக்குச் சிகிச்சையளிக்கும் வகையில் ஒப்புயர்வு மையம் தொடங்கப்பட உள்ளது.
செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் விஜயபாஸ்கர் அதேபோல் சென்னைக்கு அடுத்தப்படியாக மதுரையில் கல்லீரல் சிகிச்சைக்கான ஒப்புயர்வு மையம் தொடங்கப்பட உள்ளது. காஞ்சிபுரத்தில் புற்றுநோய் சிகிச்சைக்கான ஒப்புயர்வு மையம் தொடங்கப்பட உள்ளது. தமிழ்நாட்டில் எலி மருந்தால் பலர் பாதிக்கப்படும் நிலையில், அதனைத் தடைசெய்ய அரசு பரிசீலனை செய்துவருகிறது.
சீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்பால் தமிழ்நாட்டில் மருந்து தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பில்லை. தமிழ்நாட்டிலுள்ள மருத்துவமனைகளில் தேவையான மருந்துகள் போதிய அளவில் உள்ளன. அரசு மருத்துவமனையில் பணியாற்றும் காவலர்கள் உள்ளிட்ட ஒப்பந்த பணியாளர்கள் நோயாளிகளைத் தரக்குறைவாகப் பேசினால் அவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும்” எனத் தெரிவித்தார்.
தமிழ்நாட்டிற்கு மருந்து தட்டுப்பாட்டுக்கு வாய்ப்பில்லை- அமைச்சர் விஜயபாஸ்கர் இதையும் படிங்க: 'அங்கீகாரம் என்பது உழைப்பால் மட்டுமே கிடைக்கும்' : அமைச்சர் ஜெயக்குமார்