தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்க தயாராகிவரும் அமைச்சர் விஜயபாஸ்கரின் ‘கொம்பன்’ காளை! - கொம்பன்

புதுக்கோட்டை : உலகப் புகழ்பெற்ற மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்க தனது காளைக்கு சுகாதாரம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் பயிற்சி அளித்துக்கொண்டிருக்கும் காணொளி சமூக வலைதளங்களில் வேகமாக பரவிவருகிறது.

Minister Vijayabaskar's bull preparing to participate in the Alankanallur Jallikkattu competition
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்க தயாராகிவரும் அமைச்சர் விஜயபாஸ்கரின் ‘கொம்பன்’ காளை!

By

Published : Jan 15, 2021, 9:22 PM IST

தமிழர் புத்தாண்டான தைப் பொங்கல் திருநாள் விழாவாக தமிழ்நாட்டில் வெகு விமர்சையாகக் கொண்டாடப்படுவது வழக்கம். அத்துடன், பொங்கல் திருநாளின் மிக முக்கிய நிகழ்வான தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டி மதுரை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஆண்டுதோறும் கோலாகலமாக நடத்தப்படும்.

அந்த வகையில், இந்தாண்டுக்கான முதல் ஜல்லிக்கட்டு போட்டி, பொங்கல் பண்டிகையான நேற்று உற்சாகத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. முதல் நாள் அவனியாபுரத்திலும், இரண்டாம் நாளான இன்று பாலமேட்டிலும் ஜல்லிக்கட்டு போட்டி நடந்தன. மூன்றாம் நாளான நாளை (ஜன.16) உலகப் புகழ்பெற்ற மதுரை அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறவுள்ளது. இந்த ஜல்லிக்கட்டு போட்டியின் தொடக்கமாக கால்கோல் நடும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.

இதற்காக மாடுகளை தயார்படுத்தும் இறுதிக்கட்ட பயிற்சிப் பணியில், அவற்றை வளர்ப்பவர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். வாடிவாசலில் இருந்து ஆவேசத்துடன் சீறிப் பாயும் காளைகளை அடக்க மாடுபிடி வீரர்களும், அவர்களைக் கலங்கடித்து ஓட வைக்க காளைகளையும் தயார்படுத்தும் பயிற்சிகள் பல்வேறு கிராமங்களில் களைகட்டிவருகிறது.

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்க தயாராகிவரும் அமைச்சர் விஜயபாஸ்கரின் ‘கொம்பன்’ காளை!

அந்த வகையில், அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்கவுள்ள தனது கொம்பனுக்கு சுகாதாரம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் பயிற்சி வழங்கிவருகிறார்.

தனது சொந்த ஊரான புதுக்கோட்டை ராப்பூசல் கிராமத்தில் அவர் வளர்த்து வருகின்ற 4 ஜல்லிக்கட்டு காளைகளும், களத்தில் வீரர்களை திணறடித்து பல்வேறு பரிசுகளை வென்றுவருகின்றன. தொடர்ந்து இந்தாண்டும், ஜல்லிக்கட்டு போட்டிகளில் வீரர்களுடன் மல்லுக்கட்ட அமைச்சர் விஜயபாஸ்கரின் காளைகள் தயாராகி வருகின்றன.

கொம்பன் காளைக்கு மண் குத்தும் பயிற்சி, நீச்சல் பயிற்சி, நடைப் பயிற்சி உள்ளிட்டவைகளை அமைச்சர் விஜயபாஸ்கர் அளித்து வருகின்றார். அந்த காணொளி சமூக வலைதளங்களில் காட்டுத்தீயாய் பரவிவருகிறது.

கடந்த மூன்று ஆண்டுகளாக பல்வேறு போட்டிகளில் வீரர்களை திணறடித்த இவருடைய கொம்பன் காளை, நாளை அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு போட்டியில் இவருடைய காளை இடம்பெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க :பொங்கல் சிறப்பு பேருந்து: 5 கோடி ரூபாய்க்கு மேல் வருவாய்

ABOUT THE AUTHOR

...view details