தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

உயிருக்குப் போராடிய முதியவரை காப்பாற்றிய அமைச்சர் விஜயபாஸ்கர்! - Chief Minister coming soon Sivagangai

புதுக்கோட்டை: திருச்சி விமான நிலையத்திற்குச் செல்லும் வழியில், சாலை விபத்தில் சிக்கி உயிருக்குப் போராடிய முதியவரை அமைச்சர் விஜயபாஸ்கர் மீட்டு தனது பாதுகாப்பு வாகனத்தில் மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தார்.

minister
minister

By

Published : Dec 3, 2020, 7:27 AM IST

சிவகங்கை மாவட்டத்தில் வருகின்ற 4ஆம் தேதி சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் முதலமைச்சர் பழனிசாமி கரோனா நடவடிக்கை, வளர்ச்சித் திட்ட பணிகள் குறித்து ஆய்வுசெய்கிறார். இதனையொட்டி சிவகங்கையில் முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடந்துவருகின்றன. இப்பணிகளை ஆய்வுசெய்துவிட்டு அமைச்சர் விஜயபாஸ்கர், புதுக்கோட்டை வழியாக திருச்சி விமான நிலையத்திற்கு வாகனத்தில் சென்றுகொண்டிருந்தார்.

அப்போது, திருக்கோஷ்டியூர் அருகே முதியவர் ஒருவர் சாலை விபத்தில் சிக்கி ஆபத்தான நிலையில் உயிருக்குப் போராடிக்கொண்டிருந்தார். அடிபட்டவரைக் கண்ட அமைச்சர் விஜயபாஸ்கர், உடனடியாக தனது வாகனத்தை விட்டு இறங்கி, ஓடிவந்து அவருக்கு தானே முதலுதவி அளித்தார்.

உயிருக்குப் போராடிய முதியவரை காப்பாற்றிய அமைச்சர் விஜயபாஸ்கர்

ஆம்புலன்ஸ் வர நேரமாகும் என்பதால் தான் வந்த பாதுகாப்பு வாகனத்தில் அந்த முதியவரை அருகில் உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பிவைத்தார். தற்போது அந்த நபர் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவருகிறார்.

இதையும் படிங்க:தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை இல்லை - கே.எஸ். அழகிரி

ABOUT THE AUTHOR

...view details