தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கரோனா தடுப்பூசி: மத்திய அமைச்சர் ஹர்ஷ் வர்தன் சென்னையில் ஆய்வு - கரோனா தடுப்பூசி மைய செயல்பாடு குறித்து ஆய்வு

புதுக்கோட்டை: கரோனா தடுப்பூசி மைய செயல்பாடு குறித்து நாளை (ஜன. 08) சென்னையில் மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் ஆய்வுமேற்கொள்ளவுள்ள நிலையில் இன்று தமிழ்நாடு வந்தடைந்தார். அவர் வருகை குறித்து முன்னதாக புதுக்கோட்டையில் செய்தியாளர்கள் சந்திப்பில் அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்திருந்தார்.

tamilnadu
tamilnadu

By

Published : Jan 7, 2021, 7:39 PM IST

Updated : Jan 7, 2021, 9:42 PM IST

புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 3.5 கோடி ரூபாய் மதிப்பில் சிறப்பு இதய சிகிச்சைப் பிரிவை தொடங்கிவைத்த பின்பு செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அமைச்சர் விஜயபாஸ்கர், "தமிழ்நாட்டில் 18 அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இதய சிகிச்சைப் பிரிவு உள்ளது.

இந்தாண்டு ஒன்பதாயிரத்து 31 பேருக்கு ஆஞ்சியோ சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. எந்த ஒரு கிராமத்திலும் இதய நோயால் பாதிக்கப்பட்ட நபர்களை நெட்வொர்க்கிங் மூலமாக கண்டுபிடித்து அவர்களை அருகில் உள்ள இதய சிறப்பு சிகிச்சைப் பிரிவு மருத்துவமனைக்கு அழைத்துவந்து சிகிச்சை அளிக்கும் வகையில் வசதிகள் தற்போது உருவாக்கப்பட்டுள்ளன.

மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் ஜனவரி 8இல் சென்னையில் கரோனா தடுப்பூசி மைய செயல்பாடு குறித்து ஆய்வுசெய்கிறார். மருந்து பாதுகாத்து வைக்கப்படும் கட்டமைப்பு வசதிகளைப் பார்வையிட்டு ஆய்வுசெய்த பின்பு முதலமைச்சர் பழனிசாமியை சந்தித்து ஆலோசனை நடத்தவுள்ளார்" என்று தெரிவித்தார்.

இதையும் படிங்க:ஜனவரி 27 ஆம் தேதி சசிகலா விடுதலையாக வாய்ப்பு - உயர் நீதிமன்றத்தில் தகவல்

Last Updated : Jan 7, 2021, 9:42 PM IST

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details