தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

அரசியலில் மேஜிக் நடப்பதில் ஆச்சரியமில்லை - அமைச்சர் விஜயபாஸ்கர் - அரசியலை பற்றி அமைச்சர் விஜயபாஸ்கர்

புதுக்கோட்டை: அரசியலில் மேஜிக் நடப்பது என்பது ஆச்சரியப்படும் விஷயமில்லை என அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்

Vijayabaskar about politics
Vijayabaskar about politics

By

Published : Jan 12, 2020, 8:17 AM IST

புதுக்கோட்டை மாவட்டத்தில் அதிமுக சார்பில் வெற்றிபெற்ற மாவட்ட ஊராட்சித் தலைவர், ஒன்றிய பெருந்தலைவர்கள் ஆகியோர் புதுக்கோட்டை நகர பகுதியில் ஊர்வலமாக சென்று அமைச்சர் விஜயபாஸ்கர் தலைமையில் எம்ஜிஆர், அம்பேத்கர் ஆகியோரது சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

மறைமுக தேர்தல் வெற்றிக்குப்பின் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் விஜயபாஸ்கர்

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறுகையில், 'புதுக்கோட்டை மாவட்ட ஊராட்சிக்குழு தலைவராக ஆதிதிராவிடர் பிரிவைச் சேர்ந்த ஒரு ஏழை விவசாய குடும்பத்தைச் சேர்ந்த பெண்மணி வெற்றிபெற்றிருப்பது அரசுக்கும் அதிமுகவிற்கும் கிடைத்த பெருமை' என்றார்.

புதுக்கோட்டை மாவட்ட ஊராட்சி குழுவிற்கு திமுகவினர் அதிகமான உறுப்பினர்களை வைத்திருந்த நிலையில் அதிமுக வேட்பாளர் ஜெயலட்சுமி வெற்றி பெற்றுள்ளார்.அதேபோல் அதிமுகவினர் ஆதரவுடன் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் உமாமகேஸ்வரி துணைத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இது குறித்து செய்தியாளர்கள் கேள்வியெழுப்பியபோது, அரசியலில் மேஜிக் நடப்பது எல்லாம் ஆச்சரியப்படும் விஷயமல்ல என்று அமைச்சர் கூறினார்.

இதையும் படிங்க: 'அரசியல்வாதிகள் என்னைப் போல் இருக்க வேண்டும் '- கமல்ஹாசன்

ABOUT THE AUTHOR

...view details