புதுக்கோட்டையில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் அளித்த பேட்டியில் தெரிவித்ததாவது, வரலாற்று சிறப்புமிக்க சாதனையாக தமிழ்நாட்டில் 11 மருத்துவக் கல்லூரிகள் தொடங்கப்படவுள்ளன என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். ஏற்கனவே அறிவிக்கப்பட்ட மாவட்டங்களை சேர்த்து அரியலூர், பெரம்பலூர் மற்றும் புதிதாக அறிவிக்கப்பட்ட மாவட்டங்களில் கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்குமாக மொத்தம் 11 மாவட்டங்களில் மருத்துவக் கல்லூரி அமைக்கப்படும் என்று தமிழ்நாடு முதலமைச்சர் அறிவித்திருக்கிறார்.
‘15 ஆண்டுகளுக்கான பணிகளை ஒரே ஆண்டில் முடித்திருக்கிறோம்’
புதுக்கோட்டை: 15 ஆண்டுகளில் நடக்க வேண்டிய மக்கள் நல்வாழ்வுத்துறை பணிகளை ஒரே ஆண்டில் செய்து சாதனை படைத்திருக்கிறோம் என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.
3,575 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மருத்துவக்கல்லூரிகள் அமைக்கப்படவுள்ளன. இன்னும் ஓரிரு தினங்களில் 11 கல்லூரிகளில் முதல் ஆறு கல்லூரிகளுக்கு தமிழக முதலமைச்சர் அடிக்கல் நாட்டவுள்ளார். 10 முதல் 12 மாதத்திற்குள் பணிகள் முடிக்கப்பட்டு மத்திய குழுவின் ஆய்வுக்கு பிறகு கல்லூரிகள் செயல்படும். பதினைந்து அல்லது இருபது வருடங்களில் நல்வாழ்வுத்துறை செய்ய வேண்டிய பணிகளை ஒரு ஆண்டில் செய்து சாதனை படைத்திருக்கிறது. ஒவ்வொரு மாவட்டத்திற்கும் ஒரு மருத்துவக் கல்லூரி என்ற ஜெயலலிதாவின் கனவுகளை நனவாக்கும் வகையில் தமிழக முதல்வர் செயல்படுத்தி கொண்டிருக்கிறார் என்று தெரிவித்தார்.