புதுக்கோட்டை: பொன்னமராவதி மற்றும் வலையபட்டி பகுதியில் பேரூராட்சி பொது நிதியின் கீழ் செறிவூட்டும் குடிநீர் வழங்கும் கருவியினை தமிழ்நாடு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி மற்றும் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு ஆகியோர் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வந்தனர்.
நீதிமன்றம் உத்தரவிட்டால் அதிக நாட்கள் பரோல் - சட்டத்துறை அமைச்சர் ரகுபதி! - 7 tamil people release
எழுவர் விடுதலை தொடர்பாக நீதிமன்றம் உத்தரவு வழங்கினால் அதிக நாட்கள் பரோல் வழங்கப்படும் என தமிழ்நாடு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.
minister raghubathi about 7 tamil people release
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், “முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட 7 பேர் விடுதலை குறித்து குடியரசுத் தலைவருக்கு அனுப்பப்பட்டுள்ளது.
தற்போது எங்களால் முடிந்தது, அவர்களின் உறவினர்கள் கோரிக்கை வைத்தால் 30 நாள்களுக்கு பரோல் வழங்க முடியும். மேலும் அவர்கள் நீதிமன்றத்தை நாடி அதிக நாள்கள் பரோல் கேட்டால், அதற்கு நீதிமன்றம் உத்தரவு வழங்கும்பட்சத்தில் அதிக நாள்கள் பரோல் வழங்கப்படும்” என தெரிவித்தார்.