புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி சட்டப்பேரவை தொகுதியில் பல்வேறு வளர்ச்சித்திட்டப் பணிகளை சுற்றுச்சூழல், காலநிலை மாற்றத்துறை மற்றும் இளைஞர்நலன், விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் இன்று(ஜூலை.18) தொடங்கிவைத்தார்.
பின்னர் பேசிய அமைச்சர், " சுற்றுச்சூழல் துறை சார்பில், குளங்களுக்கு வரும் கழிவு நீரை சுத்திகரித்து அனுப்ப தேவையான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
குப்பைகள் சுத்திகரிப்பு
இதற்கென தொண்டு நிறுவனங்கள், ரோட்டரி சங்கங்கள் போன்றவை அமைக்கப்பட்டுள்ளன. திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் கடந்த 2 மாதங்களில் மட்டும் 23 இடங்களில் குப்பைகள் சுத்திகரிக்கப்பட்டு ரூ.200 கோடி சொத்து மீட்கப்பட்டுள்ளது.
இதே போன்று ஈரோடு வண்டிபாளையத்தில் சிக்மா நிறுவனம் சார்பில் திடக்கழிவு மேலாண்மை திட்டம் சிறப்பாக செயல்படுத்தப்பட்டுவருகிறது.
பல்வேறு பணிகளை அமைச்சர் தொடங்கி வைப்பு பசுமை புரட்சி விருது
அரசு அலுவலகங்கள், அரசு பள்ளிகளை பசுமையாக வைத்திருப்பவர்களுக்கு பசுமை புரட்சி விருது வழங்கப்படும் என தமிழ்நாடு முதலமைச்சர் அறிவித்துள்ளார். இவ்விருதிற்கு அறந்தாங்கி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியை பரிந்துரைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
பசுமைக்குழு
முதலமைச்சர் நியமித்த பசுமைக்குழு வருகின்ற ஜூலை 23, 24 தேதிகளில் புதுக்கோட்டை மாவட்டத்திற்கு வருகைதர உள்ளது. மேலும் புதுக்கோட்டை மாவட்டத்தில் பொதுமக்களின் தேவையறிந்து நலத்திட்டங்கள் நிறைவேற்றப்பட்டு வருகிறது.
அதனடிப்படையில் இன்றைய தினம் ஆலங்குடி சட்டப்பேரவை தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் பல்வேறு திட்டப்பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.
அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் பல்வேறு திட்டங்கள் தொடங்கி வைப்பு
‘உங்கள் தொகுதியில் முதலமைச்சர்” திட்டத்தின் கீழ் அறந்தாங்கி ஊராட்சி ஒன்றியம், தொழுவாங்காடு கிராமத்தில் ரூ.10.19 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள அங்கன்வாடி கட்டடம், சிலட்டூர் ஊராட்சி, கொல்லன்வயல் கிராமத்தில் ரூ.17 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள பள்ளிக்கட்டடம், அரசர்குளம் கீழ்பாதி ஊராட்சி(கிழக்கு) கிராமத்தில் ரூ.10.19 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள அங்கன்வாடி கட்டடம் ஆகிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது.
ஆயிங்குடி ஊராட்சி(தெற்கு) கிராமத்தில் ரூ.13.98 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட ஆழ்துளை கிணறு மற்றும் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி, ஆயிங்குடி ஊராட்சி(வடக்கு) கிராமத்தில் ரூ.9.8 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட அங்கன்வாடி கட்டடம், வல்லவாரி ஊராட்சி(கிழக்கு) கிராமத்தில் ரூ.23.01 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட தார் சாலை பணி ஆகியவை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு துவக்கி வைக்கப்பட்டுள்ளது.
அறந்தாங்கி நகராட்சியில் அமைச்சர் ஆய்வு மேலும், மாவட்டத்தில் உள்ள தைல மரங்களை அகற்றி புதிய குறுங்காடுகள், காப்புக்காடுகள் அமைக்கவும், அறந்தாங்கி பகுதியில் 25,000 நாட்டு மரங்கள் நடவு செய்யவும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
பாதாள சாக்கடை திட்டம்
கடந்த 2006இல் டாக்டர்.கலைஞர் ஆட்சியில் அறந்தாங்கி நகராட்சிக்கு ரூ.36 லட்சம் மதிப்பீட்டில் அறிவிக்கப்பட்ட பாதாள சாக்கடைத்திட்டத்தை நிறைவேற்றவும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்" எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க:தமிழ்நாட்டில் இன்று 2079 பேருக்கு கரோனா பாதிப்பு