தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தமிழ்நாட்டில் முதலமைச்சரின் சாதனைகள் வெற்றிக்கு கைகொடுக்கும் - அமைச்சர் விஜயபாஸ்கர் பேட்டி - தேர்தல் 2021

சட்டப்பேரவை தேர்தலில் மும்முனை போட்டி உருவாகியுள்ளது அதிமுகவுக்கு சாதகமாக அமையும் என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

minister c vijayabaskar press meet
புதுகோட்டை மாவட்ட அதிமுக வேட்பாளர்கள்

By

Published : Mar 12, 2021, 2:57 PM IST

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள 6 சட்டப்பேரவைத் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களான சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், வைரமுத்து ராஜநாயகம், தர்ம தங்கவேல், ஜெயபாரதி, கார்த்திக் தொண்டைமான் ஆகியோர் திருவப்பூர் முத்துமாரியம்மன் கோயிலில் வழிபாடு நடத்தினர்.

அவர்களுக்கு அதிமுக தொண்டர்கள் பிரமாண்டமான வரவேற்பு அளித்தனர். இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் விஜயபாஸ்கர்,

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள 6 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் அதிமுக வேட்பாளர்கள், அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார்கள்.

அமைச்சர் சி விஜயபாஸ்கர் புதுக்கோட்டை மாவட்ட அதிமுக வேட்பாளர்களுடன் செய்தியாளர்கள் சந்திப்பு

கடந்த 10 ஆண்டுகளில் மருத்துவக்கல்லூரி, காவிரி, வைகை, குண்டாறு இணைப்பு திட்டம், பல் மருத்துவக் கல்லூரி உள்ளிட்ட பல திட்டங்கள் புதுக்கோட்டை மாவட்டத்தில் செயல்படுத்தப்பட்டுள்ளன. இந்த திட்டங்களை எடுத்துக்கூறி வாக்குகள் சேகரிப்போம்.

தமிழ்நாட்டில் பல முனைப் போட்டி உருவாகி உள்ளது வரவேற்கத்தக்கது. எதிர்ப்பு வாக்குகள் பிரியும்போது, அது அதிமுகவுக்குதான் சாதகமாக அமையும். முதலமைச்சரின் சாதனைகள் அதிமுகவின் வெற்றிக்கு கைகொடுக்கும்.

தமிழ்நாடு அரசு எடுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையால், கரோனா பாதிப்பு கட்டுப்படுத்தப்பட்டது. கரோனா காலகட்டத்தில் தமிழ்நாடு அரசு சிறப்பாக செயல்பட்டது.

இதையும் படிங்க: எம்.ஆர். விஜயபாஸ்கருக்கு உற்சாக வரவேற்பு

ABOUT THE AUTHOR

...view details