புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் குழந்தைகள் போதைப்பொருள் பயன்படுத்தவதை தடுக்க பயன்படும் வழிமுறைகள் குறித்த ஆய்வுக் கூட்டம், தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணைய உறுப்பினர் ஆர்.ஜி.ஆனந்த் தலைமையில் நடைபெற்றது.
இந்த ஆய்வுக் கூட்டத்தில் அவர்பெற்றோர்களுக்குபல்வேறு ஆலோசனைகளை வழங்கினார். இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்து பேசியவர், 'இதுவரை தேசிய அளவில் 19 மாநிலங்களுக்கு நேரடியாகச் சென்று குழந்தைகள் தொடர்பாக 5,000 குறைகள் கேட்டறியப்பட்டு, அதில் 4,500 குறைகள் தீர்க்கப்பட்டுள்ளன என்றார்.
புதுக்கோட்டை மாவட்டத்தைப் பொருத்தவரை குழந்தைகள் பாதுகாப்பு தொடர்பாக காவல்துறையினரின் செயல்பாடுகள் மக்களின் பாராட்டுதலை பெற்றுள்ளது. குறிப்பாக குழந்தை திருமணம் தொடர்பான சம்பவங்கள் நிகழும் போது அதற்கு உறுதுணையாக இருக்கும் பெற்றோர்களின் மீது வழக்குப் பதிவு செய்ய வேண்டிய அவசியம் ஏற்படுகிறது.
ஏனெனில், இளம் வயதில் உள்ள குழந்தைகளை மீண்டும் இதுபோன்ற முயற்சிகளில் ஈடுபடுத்துவதை தடுக்கவே இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகிறது.
குழந்தைகளை காக்கும் புதுக்கோட்டை புதுக்கோட்டையில் பாதிக்கப்படும் குழந்தைகளை மீட்டு தற்காலிகமாக தங்க வைக்கக்கூடிய வகையில் தற்காலிக குழந்தைகள் காப்பகம் அமைக்க மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. இத்துறை சார்ந்த அலுவலர்கள் குழந்தைகள் நலனை நன்கு உணர்ந்து சிறப்பாக செயல்பட வேண்டியது அவர்களின் கடமை' என்று அவர் கூறினார்.