கரோனா வைரஸ் காரணமாக, அனைத்து ஊர்களிலும் முகக்கவசம் அதிகளவில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் கரோனா வைரஸ் பரவாமல் தடுக்க பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
நேற்றைய தினம் மாவட்ட ஆட்சியர் உமாமகேஸ்வரி வெளியிட்ட அறிக்கையில், "முகக் கவசத்தை அதிக விலைக்கு விற்பனை செய்யக்கூடாது" என்று கூறியிருந்தார். இந்த அறிவிப்பையும் மீறி இன்று புதுக்கோட்டை மாவட்டம் கீழராஜவீதி பகுதியில் உள்ள ராயல் மெடிக்கல் என்ற மருந்தகத்தில் முகக் கவசம் அதிகமாக விலைக்கு விற்கப்பட்டது.