தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கருணாநிதி நினைவு தினத்தை முன்னிட்டு மாரத்தான் போட்டிகள்! - புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

புதுக்கோட்டை: மறைந்த திமுக தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான மு.கருணாநிதியின் நினைவு தினத்தை முன்னிட்டு திமுக சார்பில் மாரத்தான் போட்டிகள் இன்று நடைபெற்றன.

marathon-competitions-ahead-of-karunanidhi-memorial-day
marathon-competitions-ahead-of-karunanidhi-memorial-day

By

Published : Aug 24, 2020, 5:29 PM IST

தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சரும், முன்னாள் திமுக தலைவருமான மறைந்த மு.கருணாநிதியின் நினைவு தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் திராவிட முன்னேற்ற கழகத்தின் சார்பில் மாரத்தான் போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன.

அதன் ஒரு பகுதியாக புதுக்கோட்டை வடக்கு மாவட்ட செயலாளர் செல்லபாண்டியன் தலைமையில் இன்று, புதுக்கோட்டை மாவட்டதில் மாரத்தான் போட்டிகள் நடத்தப்பட்டது. நீதிமன்ற வளாகத்திலிருந்து தொடங்கிய இந்த மாரத்தான் போட்டியானது, பழைய பேருந்து நிலையம், அண்ணா சிலை, கீழராஜவீதி, வடக்கு ராஜவீதி வழியாக புதிய பெருந்து நிலையத்தில் முடிவடைந்தது.

கருணாநிதி நினைவு தினத்தை முன்னிட்டு மாரத்தான் போட்டிகள்

இந்த மாரத்தான் போட்டியில் பள்ளி, கல்லூரிகளைச் சேர்ந்த மாணவ, மாணவியர் ஏராளமாக கலந்துகொண்டனர். மேலும் இதில் வெற்றிப்பெற்ற வீரர், வீராங்கனைகளுக்கு பதக்கம் மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது.

இதையும் படிங்க:கண்மாயில் இறந்து மிதந்த மீன்கள் - குத்தகைக்காரர்கள் புகார்

ABOUT THE AUTHOR

...view details