தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

‘நடிகர் பி.யூ. சின்னப்பாவிற்கு மணிமண்டபம்’ - நாசர் - Pandavar team leader

புதுக்கோட்டை: மறைந்த நடிகர் பி.யூ. சின்னப்பாவிற்கு விரைவில் மணிமண்டபம் கட்டிக்கொடுக்கப்படும் என பாண்டவர் அணியின் தலைவர் நாசர் தெரிவித்துள்ளார்.

பாண்டவர் அணி தலைவர் நாசர் பேட்டி

By

Published : Jun 16, 2019, 11:14 PM IST

புதுக்கோட்டையில் உள்ள நாடக நடிகர்களை சந்தித்த பாண்டவர் அணி வேட்பாளர்கள், நடிகர் சங்கத் தேர்தலில் தங்களுக்கு வாக்களிக்குமாறு ஆதரவு கோரினர். இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த பாண்டவர் அணியின் தலைவர் நடிகர் நாசர், “நடிகர் சங்கம் சார்பில் கடந்த மூன்று ஆண்டுகளில் எண்ணற்ற சாதனைகளை செய்துள்ளோம்.

பாண்டவர் அணி தலைவர் நாசர் பேட்டி

இதில் குறிப்பாக வயதான நடிகர்களுக்கு ரூ. 1.75 கோடியை பென்ஷனாக மட்டும் வழங்கியுள்ளோம். நடிகர் சங்கத்தில் எந்த பிரச்னை இருந்தாலும் நாங்களே பேசி தீர்த்துக் கொள்கிறோம். ஆனால் இதை ஊடகங்கள் தான் பெரிதுப்படுத்துகின்றன. கடந்த தேர்தலை போல் இந்த முறையும் தேர்தலில் வெற்றி பெற்றால் மறைந்த பழம்பெரும் நடிகர் பி.யூ சின்னப்பாவிற்கு மணிமண்டபம் கட்டப்படும்” என்றார்.

ABOUT THE AUTHOR

...view details