புதுக்கோட்டை மாவட்டம் மேல்மங்கலம் கிழக்குப் பகுதியைச் சேர்ந்த ஆறுமுகம்(70), பாப்பு(65) என்ற இருவரும் ஆடு மேய்க்க சென்றனர். அப்போது, திடீரென இடியுடன் கூடிய பலத்த மழை பெய்தது. இதில் இடி தாக்கி ஆறுமுகம் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பாப்பு உயிருக்கு ஆபத்தான நிலையில் அறந்தாங்கி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அறந்தாங்கி அருகே இடி தாக்கி முதியவர் உயிரிழப்பு - புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்
புதுக்கோட்டை : அறந்தாங்கி அருகே ஆடு மேய்க்க சென்ற முதியவர் இடி தாக்கியதில் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
![அறந்தாங்கி அருகே இடி தாக்கி முதியவர் உயிரிழப்பு Man killed in thunderstorm near Aranthangi](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-pdk-d-0909newsroom-1599666699-790.jpg)
Man killed in thunderstorm near Aranthangi
இச்சம்பவம் குறித்து நாகுடி காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.