புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் அருகே உள்ள சேந்தமங்கலத்தைச் சேர்ந்தவர் பொப்பன்(60). இவர், அப்பகுதி அம்மன் கோயிலில் பூசாரியாக உள்ளார். இவர் இன்று காலை அப்பகுதியில் உள்ள வயலுக்குச் சென்றுள்ளார்.
அப்போது, எதிர்பாராதவிதமாக அங்கு அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்ததில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். அதேபோல், வயல்வெளிக்கு இரை தேடிச் சென்ற பசுமாடும் மின் கம்பியை மிதித்து உயிரிழந்தது.