புதுக்கோட்டை : மாங்கநாம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் ரங்கராஜு என்ற ராஜா. அதே பகுதியைச் சேர்ந்தவர் ராஜேந்திரன். ஏற்கனவே, இருவரும் உறவினர்களாக இருந்தபோதிலும், இவர்களுக்கிடையே பாதை தொடர்பான விவகாரத்தில் முன்விரோதம் இருந்து வந்துள்ளது.
இந்த நிலையில் நேற்று பிப்.5ஆம் தேதி மாலை ராஜா தனது வீட்டிற்கு காரில் வந்துள்ளார். அப்போது சாலையின் நடுவே, கிடந்த மூங்கில் கம்பு ஒன்றை அவர் அப்புறப்படுத்த முயன்றுள்ளார்.
உயிரிழப்பு
இந்த நேரம், அவ்வழியே இருசக்கர வாகனத்தில் வந்த ராஜேந்திரன் மற்றும் அவரது நண்பர் முருகேசன் ஆகியோர் ராஜாவிடம் தகராறில் ஈடுபட்டுள்ளனர். இதன் தொடர்ச்சியாக மேலும், தகராறு முற்றி இருவரும் ஒருவருக்கு ஒருவர் அருகிலிருந்த பொருள்களை எடுத்துத் தாக்கிக் கொண்டதாகக் கூறப்படுகிறது.
இதனால், ராஜேந்திரன் ராஜாவின் தலையில் செங்கல் ஓட்டை எடுத்து அடித்ததாகக் கூறப்படுகிறது. காயமடைந்த ராஜா மயங்கி விழுந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். ராஜேந்திரன் மற்றும் முருகேசன் ஆகியோர் அந்த பகுதியிலிருந்து தலைமறைவு ஆகினர்.
காவல்துறை விசாரணை
இதனையடுத்து அக்கம்பக்கத்தில் இருப்பவர்கள் ராஜாவை மீட்டு புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குக் கொண்டு வந்தனர். ஆனால் பரிதாபமாக வரும் வழியிலேயே உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக கணேஷ் நகர் காவல்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: சூடுபிடிக்கும் நீட் விவகாரம்: கட்சித் தலைவர்களின் காரசார கருத்துகள்