தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

வாட்ஸ் அப்பில் கரோனா வைரஸ் வதந்தி: ஒருவர் கைது

புதுக்கோட்டை: பொன்னமராவதி பேரூராட்சி பகுதியில் தனிமைப்படுத்தப்பட்டிருக்கும் ஒருவருக்கு கரோனா வைரஸ் தொற்று இருப்பதாகக் கூறி வாட்ஸ் அப்பில் வதந்தி பரப்பிய நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

Man arrested for spreading rumor  regarding Corona virus
Man arrested for spreading rumor regarding Corona virus

By

Published : Apr 17, 2020, 1:21 PM IST

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி பேரூராட்சி பகுதியில் ஒருவருக்கு கரோனா வைரஸ் தொற்று இருப்பதாக வாட்ஸ் அப்பில் வதந்தி பரவியது. இதைத்தொடர்ந்து, இதனை பரப்பிய நபரை கைது செய்ய வேண்டுமென பொன்னமராவதி காவல் நிலையத்தில் சுகாதார ஆய்வாளர் புகார் கொடுத்துள்ளார்.

மனு விசாரணையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருண்சக்திக்குமார் உத்தரவின் பேரில் பொன்னமராவதி காவல் துணை கண்காணிப்பாளர் தமிழ்மாறன், காவல் ஆய்வாளர் கருணாகரன் ஆகியோர் தலைமையில் வாட்ஸ் அப்பில் அவதூறு பரப்பியவரை தேடிவந்தனர்.

இந்நிலையில், பொன்னமராவதி விசாலாட்சி நகரில் வசித்துவரும் அழகப்பன் மகன் சிவக்குமார் (42) தனது பகுதியில் தனிமைபடுத்தப்பட்டு இருக்கும் ஒரு குறிப்பிட்ட நபருக்கு கரோனா தொற்று இருப்பதாக கூறி வாட்ஸ் அப்பில் வதந்தி பரப்பியது தெரியவந்தது.

இதைத்தொடர்ந்து, காவல் துறையினர் அவரை கைது செய்து அவரை பேரிடர் மேலாண்மை சட்டப்பிரிவு, தகவல் தொழில்நுட்ப சட்டப்பிரிவு உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து திருமயம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி நீதிமன்ற காவலில் வைத்துள்ளனர்.

மேலும் இதுபோல் அவதூறு பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் என காவல் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதையும் படிங்க:ஊரடங்கு விதிகள் மீறல்: திமுக எம்எல்ஏ கருணாநிதி மீது வழக்குப்பதிவு!

ABOUT THE AUTHOR

...view details