தஞ்சாவூர் மாவட்டம் கொளக்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் விநாயகமூர்த்தி(38). இவருக்கு அய்யம்மாள் என்ற மனைவியும், இரு குழந்தைகளும் உள்ளனர். புதுக்கோட்டை மாவட்டம் மங்களநாடு பகுதியில் விநாயமூர்த்திக்கு சொந்தமான தோட்டம் உள்ளது.
இதனால் அவர் அடிக்கடி தோப்பிற்கு வந்து செல்வது வழக்கம். இந்நிலையில், தோப்பில் கழுத்தறுக்கப்பட்ட நிலையில் விநாயகமூர்த்தி சடலமாக கண்டெடுக்கப்பட்டார். இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், உடலை மீட்டு உடற்கூறாய்வுக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.